நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம் இந்தியாவில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு குறித்த தேசிய மாநாடு: ஜூலை 5-ஆம் தேதி உணவு மற்றும் பொது விநியோகத் துறை ஏற்பாடு
இந்தியாவில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு குறித்த ஒரு நாள் தேசிய மாநாட்டை புதுதில்லியில் ஜூலை 5-ஆம் தேதி உணவு மற்றும் பொது விநியோகத் துறை நடத்தவிருக்கிறது. மாற்று கற்றலை எளிதாக்குவதையும், பொது விநியோக அமைப்புமுறையின் கீழ் இயங்கும் திட்டங்களுக்கு சிறந்த நடைமுறைகளை வழங்குவதையும், ஊட்டச்சத்து பாதுகாப்பில் கவனம் செலுத்துவதை வலுப்படுத்துவதையும் இந்த மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது.
மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணையமைச்சர்கள் திருமிகு சாத்வி நிரஞ்சன் ஜோதி மற்றும் மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் திரு அஷ்வினி குமார் சௌபே ஆகியோர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம், வர்த்தகம் மற்றும் தொழில்துறை, ஜவுளித்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் இந்த மாநாட்டில் உரையாற்றுவார். மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களின் உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள்.
உணவு செறிவூட்டல், உணவு உற்பத்தியின் பல்வகைப்படுத்தல், பயிர் பல்வகைப்படுத்தல், ஒருங்கிணைந்த அன்னவித்ரான் தளம் 2.0, பொது விநியோக அமைப்புமுறை மற்றும் சேமிப்புத் துறையில் சீர்திருத்தங்கள் பற்றிய விவாதம் உள்ளிட்டவை இந்த மாநாட்டின் முக்கிய அம்சங்களாக இருக்கும்.
கருத்துகள்