டெல்லி காவல்துறையின் புதிய காவல் ஆணையராக 1988 பேட்ச் தமிழ்நாடு கேடர் ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சய் அரோரா மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை நியமித்துள்ளது
சஞ்சய் அரோராவுக்கு 2004 ஆம் ஆண்டு காவல்துறைப் பதக்கம், 2014 ஆம் ஆண்டு சிறப்பான சேவைக்காக குடியரசுத் தலைவரின் காவல்துறை பதக்கம், காவல்துறை சிறப்புப் பணிக்கான பதக்கம், அன்ட்ரிக் சுரக்ஷா பதக் மற்றும் ஐநாவின் அமைதியை நிலைநாட்டும் பணிக்காக பதக்கம் உள்பட பல விருதுகள் பெற்றவர்.
இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்துறையின் (ITBP) தற்போதைய இயக்குநர் ஜெனரலான அரோரா, டெல்லி காவல் ஆணையராக ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதியான இன்று திங்கள்கிழமை பொறுப்பேற்க உள்ளார். சந்தனக் கடத்தல் காரணமாக அதிரடி படையினர் மூலம் கொல்லப்பட்ட வீரப்பனை பிடிக்க அமைத்த படையில் முக்கிய பங்காற்றியவர்.
இராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய் அரோரா, 1988-ஆம் ஆண்டில் ஐபிஎஸ் முடித்து தமிழ்நாடு பிரிவின் அதிகாரியாகப் பணியாற்றினார். எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் பி.டெக் பட்டம் பெற்றவர். இந்தோ - திபெத் எல்லை படையின் (ஐடிபிபி) இயக்குநர் ஜெனரலாக பணியாற்றி வந்தார். தற்போது
டெல்லி பொறுப்பிலிருந்த ராகேஷ் அஸ்தானா ஐபிஎஸ் நேற்றுடன் பணி ஓய்வு பெறுவதை அடுத்து, மத்திய உள்துறை அமைச்சகம் சஞ்சய் அரோராவை டெல்லி காவல்துறை ஆணையராக நியமித்துள்ளது. டெல்லியின் 25-வது காவல் துறை ஆணையராக சஞ்சய் அரோரா இன்று பதவியேற்கிறார். வரும் 2025-ஆம் ஆண்டு வரை இவர் இப்பதவியில் தொடர்வார். டெல்லி விதிகளின்படி வேற்று மாநிலப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் இங்கு பணியாற்ற முடியாது.
இதனால், சஞ்சய் அரோரா ஏஜிஎம்யுடி (அருணாச்சல், கோவா, ஜம்மு-காஷ்மீர் மற்றும் யூனியன் பிரதேசம்) பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். டெல்லியில் நியமிக்கப்படுவதற்காக மாநிலப் பிரிவிலிருந்து மாற்றப்பட்ட மூன்றாவது வது அதிகாரி சஞ்சய் அரோரா. இவருக்கு முன் ராகேஷ் அஸ்தானா குஜராத் பிரிவிலிருந்து டெல்லிக்கு மாற்றப்பட்டார்.
அஸ்தானாவை போலவே மிகவும் திறமையான அதிகாரியாகக் கருதப்படுகிறார் சஞ்சய் அரோரா. இவர் தமிழகத்தின் எஸ்டிஎப் எனும் அதிரடி படையின் முக்கிய அதிகாரியாக இருந்த போதுதான் சந்தனக் கடத்தல் செய்த வீரப்பன் கொல்லப்பட்டார். வீரப்பன் வேட்டைக்கு தலைமை வகித்த ஐபிஎஸ் அதிகாரி விஜய்குமாருக்கு மிகவும் நெருக்கமானவராக சஞ்சய் அரோரா கருதப்பட்டார். மேலும், முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதாவுக்கு முதன்முதலில் கறுப்புப் பூனை படை பாதுகாப்பு அளிக்கப்பட்ட போது அப்படையை ஏற்படுத்தியதில் முக்கிய பங்காற்றியவர்.
கடந்த 1997 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை மத்திய அரசின் அயல்பணியில் ஐடிபிபியின் கமாண்டன்ட்டாக உத்தராகண்டிலும், பயிற்சியாள ராக முஸோரியின் ஐடிபிபி பயிற்சிக் கல்லூரியிலும் பணியாற்றிய சஞ்சய் அரோரா.
கோயமுத்தூர் நகரில் காவல் துறை ஆணையராக 2002 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை இருந்தார். டிஐஜியாக பதவி உயர்வு பெற்றவர், விழுப்புரம் சரகத்திலும், தமிழகத்தின் இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவிலும் பணியாற்றினார். தனது வீரதீரச் செயல்களுக்காக தமிழகம் மற்றும் மத்திய அரசின்பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்
சென்னை மாநகரக் காவல் துறையின் கூடுதல் ஆணையராக குற்றவியல் பிரிவு, தலைமையகம் மற்றும் போக்குவரத்துப் பிரிவுகளில் பணியாற்றியுள்ளார். தனது பதவி உயர்வுக்கு பின் தமிழ் நாடு காவல் துறையின் தலைமையக நிர்வாகம் மற்றும் ஆபரேஷன் பிரிவுகளின் ஏடிஜிபியாகவுமிருந்தார்.
மத்திய அரசின் அயல்பணியில் எல்லைப் பாதுகாப்பு படையில் ஐஜி ஆபரேஷன், சத்தீஸ்கரில் நக்ஸல் வேட்டையாடும் சிஆர்பிஎப் ஐஜியாகவும் இருந்தார். இதே படையில் ஏடிஜியாகவும் பதவி உயர்வு பெற்றார். ஜம்மு-காஷ்மீர் சிறப்பு பிரிவின் இயக்குநர் ஜெனரலாகவும் பணியாற்றினார்.
கருத்துகள்