தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் செல்போன் கடை நடத்தி வந்த
வியாபாரிகளான தந்தை ஜெயராஜ் - மகன் பென்னிக்கிஸ் என்ற இருவர் 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19 ஆம் தேதி காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துசெல்லப்பட்டு விசாரணையின் போது காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் கால மீது தவறான பார்வையை உருவாக்கிய நிலையில் இருவர் உயிரிழந்த குற்றச்சாட்டின் கீழ் தொடரடப்பட்ட கொலை வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்ட 9 பேரின் மீது சிபிஐ தரப்பில் விசாரணை நடத்தி குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட வழக்கில்
கடந்த வெள்ளிக்கிழமை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி நாகலட்சுமி முன்பாக விசாரணை நடைபெற்றபோது இந்த வழக்கின் மிக முக்கியமான சாட்சியமாக பென்னிக்ஸ் செல் போன் அழைப்புகளை எடுத்துக் கொடுத்த ஏர்டெல் அதிகாரியிடம் சாட்சி விசாரணை நடைபெற்றது. அதனையடுத்து இந்த வழக்கு தொடர்பாக, சிபிஐ தரப்பில் முதற்கட்டமாக 2027 பக்கம் உள்ள குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் இரண்டாம் கட்டமாக கூடுதலாக 400 பக்கம் அளவிலான குற்றப்பத்திரிகை இணைத்து தாக்கல் செய்யப்பட்டது, சிபிஐ தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சித் தகவல். வெளியாகியுள்ளது. விசாரணையில் காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்த வழக்கில் சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில்
ஜெயராஜ், பென்னிக்ஸின் ரத்தக் கறை படிந்த கைலிகளை குப்பைத் தொட்டியில் காவல்துறை வீசியதாக குற்றப்பத்திரிகையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட காவல்துறை அலுவலர்கள் பொதுவான நோக்கத்துடன் குற்றவியல் சதித்திட்டத்தை தீட்டியுள்ளனர். ஜெயராஜ் -பென்னிக்ஸ் இருவரையும் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 7 காவலர்கள் துன்புறுத்தினர். இருவரின் காயங்களில் இருந்து இரத்தம் கசிந்தது. ரத்தக்கறைகளை சுத்தப்படுத்த பென்னிக்ஸ் கட்டாயப்படுத்தப்பட்டார் என்றும் குறிப்பிட்டுள்ளது. இது தற்போது நீதிமன்றத்தில் விசாரணை முடிவில் மேலும் உண்மைகள் வெளிவரும்.. சட்ட விதிமீறல்கள் முடிவுக்கு வரும்.
கருத்துகள்