சென்னை விமான நிலைய சுங்கத்துறையினரால் ரூ.46.13 லட்சம் மதிப்புள்ள ஒரு கிலோ 24 கேரட் தங்கக்கட்டி பறிமுதல்
சென்னை விமான நிலைய சுங்கத்துறையினரால் ரூ.46.13 லட்சம் மதிப்புள்ள ஒரு கிலோ 24 கேரட் தங்கக்கட்டி பறிமுதல் செய்யப்பட்டது
சிங்கப்பூரில் இருந்து இன்று அதிகாலை சென்னை வந்த இன்டிகோ விமானத்தின் பின்பக்க கழிப்பறையை சோதனையிட்ட போது ரூ.46.13 லட்சம் மதிப்புள்ள ஒரு கிலோ 24 கேரட் தங்கக்கட்டி சென்னை விமான நிலைய சுங்கத்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டது. 1962-ம் ஆண்டு சுங்கச்சட்டத்தின் கீழ் இந்த தங்கக்கட்டி பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் திரு கே ஆர் உதய்பாஸ்கர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்தார்
கருத்துகள்