விழுப்புரம் மாவட்ட திமுக நிர்வாகி வெட்டிப் படு கொலை; மூன்று பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்.
வானூர் அருகேயுள்ள கோட்டக்கரை பகுதி ஜெயக்குமார். திமுக-வில் பொதுக்குழு உறுப்பினராவார் இவரது தாய் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் தற்போது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் இவர் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்டவராவார்
கோட்டக்கரையிலிருந்து திருசிற்றம்பலம் கூட்டுச்சாலை நோக்கி இன்று காலை 6.30 மணியளவில் அவரது இருசக்கர வாகனத்தில் ஜெயக்குமார். வந்த போது, இரும்பை எனுமிடத்தில் கத்தியை காட்டி திடீரென வழிமறித்த மூன்று பேர் கொண்ட கும்பலைப் பார்த்து சுதாரித்த ஜெயக்குமார், அங்கிருந்து தப்பியோட முயன்ற நிலையில், அந்தக் கும்பல் அவரை வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளது. உடனே, அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாகத் தெரிகிறது. இந்தத் தகவலின் படி, சம்பவ இடத்திற்கு வந்த ஆரோவில் காவல்துறையினர் தீவிரமாக விசாரிக்கின்றனர். இந்தச் சம்பவம் பற்றி ஆரோவில் காவல்துறை தரப்பில் : "2020-ஆம் ஆண்டு நடைபெற்ற வேறு கொலை சம்பவத்தில் ஜெயக்குமாரின் சகோதரர் மகன் தமிழ்வேந்தன் சம்பந்தப்பட்ட நிலையில் அவரை, ஜெயக்குமார் ஜாமீனில் எடுத்ததாகத் தெரிகிறது. அந்த விரோதத்தில் இந்தக் கொலை நிகழ்ந்திருக்கலாம் என முதற்கட்டமாக விசாரித்த வரையில் தெரியவந்துள்ளது.
மேலும், வானூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகிலுள்ள தேனீர் கடையில் ஜெயக்குமார் தினமும் காலையில் குடிப்பதற்கு வருவதைத் தெரிந்து தான், இன்று காலை 6.45 மணியளவில் இரும்பை சிவன் கோவிலருகே வரும் போது வழிமறித்து வெட்டியுள்ளனர். விசாரணையில், குமாரவேல், சந்துரு, குமார் என்பவர்கள் இந்த கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. அவர்களை தேடி வருகிறோம். புகார் பெறப்பட்டதும் வழக்கு பதிந்து அடுத்தக்கட்ட விசாரணை மேற்கொள்ளப்படும்" என்றனர். இது தற்போது அப்பகுதியில் மக்கள் மத்தியில் பேச்சாகும்
கருத்துகள்