நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு தொடர்பாக அறப்போர் இயக்கம் குறித்து எடப்பாடி கே.பழனிசாமி தாக்கல் செய்த மனு தள்ளுபடி
நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு தொடர்பாக எடப்பாடி கே.பழனிசாமி மீது அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு கூறவே அதற்கு தடை விதிக்க் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான வழக்குக்கு நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது.
2016 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற அதிமுக ஆட்சியில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, நெடுஞ்சாலை துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த போது 2019, முதல் 2021 ஆம் ஆண்டுகள் வரையில் தஞ்சாவூர், சிவகங்கை, கோயமுத்தூர் மாவட்டங்களின் நெடுஞ்சாலையில் டெண்டர் பணிகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், தலைமைச் செயலாளர், நெடுஞ்சாலை துறை, லஞ்ச ஒழிப்புத் துறை ஆகியவற்றிடம் அறப்போர் இயக்கம் ஜூலை மாதம் 22 ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டது
நல்ல நிலையில் உள்ள சாலைகளை மீண்டும் போடுவதற்கு இந்த டெண்டர்களில் சேர்த்தததன் மூலமும், திட்டமதிப்பு அதிகப்படுத்தப்பட்டிருந்ததாலும், அரசுக்கு 692 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக புகாரில் உள்ளது.
அறப்போர் இயக்கம் அவதூறாக செய்தி வெளியிடுவதாக எடப்பாடி கே.பழனிசாமி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில். ஒரு கோடியே பத்தாயிரம் ரூபாய் இழப்பீடு கேட்டு அறப்போர் இயக்கத்துக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதிமுக ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறையில் நடந்த செட்டிங் டெண்டர் ஊழல்களை விசாரித்து அதில் ஈடுபட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் முன்னாள் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர், முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவில் 14 பக்கம் புகார் மனுவும் மற்றும் 78 பக்கங்கள் கொண்ட ஆதாரங்களையும் அறப்போர் இயக்கம் சார்பில் சமர்ப்பித்தது.
திமுக அரசின் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு கடந்த ஒரு ஆண்டு காலத்திற்கும் மேல் இந்த ஊழல் குறித்து வாய் திறக்காமல் இருந்தது போல இனியும் மவுனமாக இல்லாமல் மக்களுக்கு நீதிமன்றத்தில் நடந்த இந்த நிகழ்வுகளுக்குப் பின்னர் விளக்கம் அளிப்பாரா? அவர் இது வரை அமைதியாக இருக்க என்ன காரணம் என்று தைரியமாகச் சொல்வாரா? யார் தவறு செய்தாலும் தண்டிப்பேன் என்று கோஷமிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த அதிமுக அரசின் முதல்வர் நடத்திய ஊழல் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்? என்றும் அறப்போர் இயக்கம் வினா எழுப்புகிறது. தஞ்சாவூர் நெடுஞ்சாலைத்துறையில் செய்யப்பட்ட டெண்டர் செட்டிங் புகாரில் அன்று அங்கு கண்காணிப்பு பொறியாளராக பணியாற்றிய பழனி ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
அடுத்த கட்டமாக அவர் மீது FIR போடப்பட்டு கைது செய்து விசாரிக்க வேண்டும். இந்த 692 கோடி செட்டிங் புகாரில் அன்றைய முதல்வர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமியின் பங்கு என்ன என்று விசாரணை நடத்தப்பட வேண்டும்.டெண்டர் திறக்கப்படுவதற்கு முன்பே அந்த டெண்டர் யாருக்கு கொடுக்கப்பட இருக்கிறது என்று அறப்போர் இயக்கம் வெளியிட்டு புகார் அளித்து வந்ததால் பழைய டெண்டரை ரத்து செய்யாமல் ரகசியமாக புதிய டெண்டர் போட்டு அதிமுக அமைச்சர்களுக்கு நெருக்கமான நிறுவனங்களுக்கு செட்டிங் செய்துள்ளார்கள் என ஒரு தனியார் தொலைக்காட்சி செய்திகள் தருகிறது இரண்டு முறை ரத்து செய்யப்பட்டு மூன்றாவது முறையாகவும் முடிவு செய்யப்பட்டுள்ள நெடுஞ்சாலைத்துறை டெண்டர் பொறுப்பாளரான பழனி.
டெண்டர் விவகாரம் எல்லாம் அதிகாரிகள் தான் பார்த்துக்கொள்ளுகிறார்கள் என்று சொல்லிய முன்னால் முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி இந்த அதிகாரி மீது என்ன நடவடிக்கை எடுத்தார்? நெடுஞ்சாலைத்துறைக்கு செயலாளர் என்று ஒரு IAS அதிகாரி தற்போது இருக்கிறாரே அவர் இந்தப் பழனி மீது என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்?
டெண்டர்கள் மூலம் மக்கள் வரிப்பணத்தை மிச்சப்படுத்தாமல் அதிக விலைக்கு முடிவு செய்யத் துணை போகும் அதிகாரிகளை உடனுக்குடன் தண்டித்தால் தான் ஊழல் அரசியல்வாதிகளுக்கு துணை செல்லப் பயப்படுவார்கள். அந்த பயத்தை அந்த அதிகாரிகளுக்கு விரைவில் ஏற்படுத்த அறப்போர் இயக்கம் போன்ற அமைப்பு முயற்சி செய்கிறது.
ஆனால் ஊழலை ஒழிப்பதாகச் சொல்லி ஊழல் எதிர்ப்பை முற்றிலும் ஒழித்து பிரதமர் நரேந்திர மோடி அரசின் சாதனைகளும்.
பி எம் கேர்ஸ் மூலம் நாட்டு மக்களிடம் நன்கொடை வாங்கி அந்தக் கணக்கை யாரிடமும் சொல்ல முடியாது என்று சொல்லி, வெளிப்படைத்தன்மைக்கு மிகச் சிறந்த உதாரணமாக திகழ்ந்தார்.
ஒரு அரசு துறையில் ஊழல் நடந்ததாக புகார் வந்தால் அந்தப் புகாருக்கு உள்ளான அரசு ஊழியரை விசாரிக்க அந்த துறையின் மேல் அதிகாரியின் எழுத்துபூர்வமான அனுமதி வாங்க வேண்டும் என்று சட்டத்திருத்தம் கொண்டு வந்து ஊழல் ஊழியர்களுக்கு பாதுகாப்பு கொடுத்தார். தன்னுடைய துறையில் ஊழல் நடந்தது என்று எந்த உயர் அதிகாரி விசாரணை நடத்த அனுமதி கொடுக்கப் போகிறார்? அல்லது அவரே பங்கு வாங்கியிருந்தால் அந்த அதிகாரி எப்படி அனுமதி தருவார்.அறப்போர் இயக்கம் சமூக வலைதளங்களில் வெளியிட்ட செய்தி தனக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதுடன், மன உளைச்சலும் ஏற்படுத்தியுள்ளதாக கூறி அறப்போர் இயக்கம், அதன் ஒருங்கிணைப்பாள ஜெயராம் வெங்கடேஷ், இணை ஒருங்கிணைபாளர் ஜாகிர் உசேனுக்கு எதிரான மனு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்த போது இடைக்கால தடை விதிக்கக் கோரி எடப்பாடி கே.பழனிசாமி வழக்கறிஞர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அறப்போர் இயக்கத்தின் தகவல்கள் அனைத்தும் வெளியாகி விட்டதால், தடை விதிக்க அவசியமில்லை எனக் கூறி வழக்கு விசாரணையை ஜூலை மாதம் 11-ஆம் தேதிக்குத் தள்ளி வைத்தார்.
கருத்துகள்