ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் வீரமரணமடைந்த இராணுவ வீரர் இலட்சுமணன் உடலுக்கு அவரது சொந்த ஊர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா தும்மக்குண்டு T.புதுப்பட்டியில் இன்று இராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது
அங்கு உயர் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தியபின் இன்று சனிக்கிழமை காலை தனி விமானம் மூலம் அவரது உடல் ஹைதராபாத்துக்கு கொண்டு வரப்பட்டு பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் இன்று மதியம் 12.15 மணிக்கு மதுரைக்கு கொண்டு வரப்பட்டது. ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு அமைச்சர் பி.டிஆர்.பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சித்தலைவர் அனீஷ்சேகர், மாநகராட்சி கமிஷனர் சிம்ரன் ஜித்சிங் கலோன், காவல்துறை கண்காணிப்பாளர் சிவபிரசாத், மேயர் இந்திராணி, துணைமேயர் நாகராஜன், முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் ராணுவ உயர் அதிகாரி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர் அதைத்தொடர்ந்து ராணுவ வாகனத்தில் லட்சுமணனின் உடல் டி.புதுப்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு அவரது உடலுக்கு பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டிருந்து அஞ்சலி செலுத்தினர். மேலும் தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட 20 லட்சம் ரூபாய்கான காசோலை மாவட்ட நிர்வாகம் சார்பில் லட்சுமணனின் பெற்றோரிடம் வழங்கப்பட்டதையடுத்து லட்சுமணனின் உடல் அடக்கம் செய்யும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். மேலும் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சித்தலைவர் அனீஷ்சேகர், முன்னாள் முதல்வர் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் முன்னால் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் பல்வேறு அரசு துறை அதிகாரிகள் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்று ராணுவ வீரரின் உடலுக்கு மரியாதை செலுத்தினர். தொடர்ந்து இந்திய ராணுவத்தின் சார்பில் 21 குண்டுகள் முழங்க ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டு முழு ராணுவ மரியாதையுடன் லட்சுமணனின் உடல் அவரது சொந்த இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
வீரர் லட்சுமணன் உடல் மீது போர்த்தப்பட்ட தேசிய கொடி மனைவியிடம் வழங்கப்பட்டது. அந்த நிகழ்வில் தமிழகத்தின் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமசந்திரன், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு , நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் மரியாதை செலுத்தினர் பின்னர் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்த நிவாரண நிதியாக ரூபாய் 20 லட்சத்திற்கான காசோலையை வீரர் லட்சுமணன் குடும்பத்தாரிடம் வழங்கி ஆறுதல் தெரிவித்தார் மேலும் இறுதி அஞ்சலி நிகழ்வில்
அதிமுக தேர்தல் பிரிவுச் செயலாளர், மதுரை புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் .இ.மகேந்திரன்
ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர் இலட்சுமணன் உடல் விமானம் மூலம் மதுரை கொண்டு வரப்பட்டது அப்போது அவர்களது உடலுக்கு மதுரை விமான நிலைய வளாகத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் முனைவர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மலர்வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். பின்னர் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் சென்ற கார் மீது பாஜகவினர் காலணியை வீசியதால் மதுரை விமான நிலையம் அருகே பரபரப்பு ஏற்பட்டது.
வீர மரணமடைந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு மரியாதை செய்யும் நிகழ்வுக்கு, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வருவதை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட கட்சியினர் இன்று மதுரை விமான நிலையம் அருகே குவிந்த போது, இந்நிகழ்வு விமான நிலைய இடத்திற்கு வந்த நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், "அரசு நிகழ்ச்சி என்பதால் இவர்கள் ஏன் கூட்டமாக வந்தனர் எனக் கேள்வி எழுப்பியதாகவும் அதனால், அமைச்சருக்கும் பாஜகவினருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அமைச்சர் பாஜகவினரை வெளியேறுமாறு உத்தரவிட்டதால் பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், சலசலப்பு ஏற்பட்டது.
பின்னர் ராணுவ வீரர் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திவிட்டு அங்கிருந்து சென்ற நிதி அமைச்சரின் காரின் மீது பாஜகவின் நபர்கள் காலணிகளை விட்டு எறிந்தனர். இதனால், அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. காலணி எறிந்தவர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்திய பின்னர் அமைச்சரின் வாகனம் அங்கிருந்து சென்றது. தொடர்ந்து, அமைச்சரின் கார் மீது காலணி வீசியவர்கள் குறித்து காவல்துறையினர் வீடியோ ஆதாரங்களைக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அமைச்சர் வாகனம் மீது தாக்குதல் நடத்திய மதுரை பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் மார்க்கெட் குமார், பாலா, திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த ஜெயகிருஷ்ணா, கோபிநாத் மற்றொரு கோபிநாத் என ஐந்து நபர்கள் மீது காவல்துறையினர் நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த நிலையில். இந்த விவகாரம் தொடர்பாக அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கருத்துகள்