சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் கிராமக் கோவில் திருவிழா மரியாதை பிரச்சினையில் மூன்று பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 27 பேருக்கு ஆயுள் தண்டனை
விதித்து சிவகங்கை மாவட்ட வன்கொடுமை தடுப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.
கச்சநத்தம் கிராமத்தில் 2018 ஆம் ஆண்டு மே மாதம் 28-ஆம் தேதி கோயில் திருவிழா மரியாதை தொடர்பான பிரச்சினையில் , ஒரு சமூகத்தினர், மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த ஆறுமுகம், சண்முகநாதன், சந்திரசேகராகிய மூன்று பேரைக் கொல்லப்பட்டனர் மோதலில் ஐந்து பேர் காயமடைந்தனர்.
இச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பழையனூர் காவல்துறையினர், ஆவரங்காடு கமன், அருண்குமார், சந்திரகுமார், அக்னிராஜ், ராஜேஷ் உள்ளிட்ட 33 நபர்கள் கைது செய்ததற்கிடையில், இந்த வழக்கில் தொடர்புடைய இருவர் உயிரிழந்தனர். ஒருவர் தலைமறைவானார்.
மேலும் மூன்று சிறுவர்களைத் தவிர்த்து, 27 பேருக்கான வழக்கு விசாரணை சிவகங்கை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த வழக்கை விசாரித்த நீதிபதி முத்துக்குமரன், இந்த வழக்கில் 27 பேரும் குற்றவாளிகள் என்று நான்கு நாட்கள் முன்பு அறிவித்த நிலையில் இன்று நீதிமன்றத்தில் தண்டனை விபரம் வாசித்து தீர்ப்பளித்த நீதிபதி, கச்சநத்தம் கொலை வழக்கில் தொடர்புடைய 27 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார் அவர்கள் விபரம் வருமாறு.:-
1.சுமன் 2.அருண் அருண்குமார் 3.சந்திரகுமார் 4.அக்னி ராஜ் 5.ராஜேஸ்வரன்
6.இளையராஜா 7.கனித் என்ற கனித்குமார்
8.கருப்பு ராஜா என்ற முனியாண்டி சாமி 9.மைக்கேல் முனியாண்டி 10.ஒட்டகுலத்தான் என்ற முனியாண்டி 11.ராமகிருஷ்ணன்
12.மீனாட்சி 13.செல்வி
14.கருப்பையா 15.சுரேஷ்குமார்
16.சின்னு 17.செல்லம்மாள்
18.முத்தையா என்ற முத்து சேர்வை
19.முத்துச்செல்வம்
20. முத்தீஸ்வரன் என்ற முத்து முனீஸ்வரன்
21.ராமச்சந்திரன்
22.சுள்ளான் கருப்பையா 23.மாயச்சாமி
24.பிரசாத் என்ற அருண்பாண்டி (உயிரிழப்பு)
25.ரவி என்ற முகிலன் 26.ரவி
27.அருள் நவீன் 28.தவிடு என்ற கார்த்திக்
29.மட்டி வாயன் என்ற முத்துமணி ஆகியோருக்கு இன்று காலை 11 மணிக்கு தொடங்கி வழக்கில், நீதிபதி முத்துகுமரன் 27 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார் , இந்த வழக்கு நான்காண்டுகள் நடந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
கருத்துகள்