2022 ஆம் ஆண்டு 'மிஸ் இந்தியா யுஎஸ்ஏ' அழகி பட்டத்தை இந்திய அமெரிக்க இளம்பெண் ஆர்யா வால்வேகர் (வயது 18) கைப்பற்றினார்.
அமெரிக்கா நியூஜெர்சியில் மிஸ் இந்தியா யுஎஸ்ஏ, மிஸஸ் இந்தியா யுஎஸ்ஏ மற்றும் மிஸ் டீன் இந்தியா யுஎஸ்ஏ ஆகிய மூன்று பிரிவுகளில் நடைபெற்ற நிகழ்வில் 30 மாநிலங்களைச் சேர்ந்த 74 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். 2022 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா யுஎஸ்ஏ அழகி போட்டி 40 வது ஆண்டை நிறைவு செய்துள்ளது. இது இந்தியாவுக்கு வெளியே நீண்ட காலமாக நடைபெறும் இந்திய அழகி போட்டி. இதில் வர்ஜீனியாவைச் சேர்ந்த இந்திய அமெரிக்க பெண்ணான ஆர்யா வால்வேகர், 'மிஸ் இந்தியா யுஎஸ்ஏ 2022' பட்டத்தை வென்றார்."என்னை வெள்ளித்திரையில் பார்ப்பதும், திரைப்படங்கள் மற்றும் டி.வியில் வேலை பார்ப்பதும் எனது சிறுவயதுக் கனவாக இருந்தது. புதிய இடங்களுக்கு பயணம் மேற்கொள்வது, சமைப்பது மற்றும் விவாதிப்பது ஆகியவை பொழுதுப்போக்கு என்றார்.
வர்ஜீனியா பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு மருத்துவப் படிப்பு மாணவி சௌமியா ஷர்மா இரண்டாம் இடத்தையும், நியூ ஜெர்சியைச் சேர்ந்த சஞ்சனா செகுரி மூன்றாவது இடத்தையும் பெற்றனர். இது நியூயார்க்கை இருப்பிடத்தளமாகக் கொண்டு அங்கு இந்திய-அமெரிக்கர்கள் தர்மாத்மா மற்றும் நீலம் சரண் ஆகியோரால் உலகளாவிய போட்டிகளின் பதாகையின் கீழ் துவங்கப்பட்டது.
உலகளாவிய போட்டிகளின் நிறுவனரும் தலைவருமான தர்மாத்மா சரண் தெரிவிக்கையில்," பல ஆண்டுகளாக உலகெங்கிலும் உள்ள இந்திய சமூகத்தின் ஆதரவிற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
வாஷிங்டனை சேர்ந்த அக்ஷி ஜெயின் மிஸஸ் இந்தியா யுஎஸ்ஏ பட்டத்தையும், நியூயார்க்கைச் சேர்ந்த தன்வி குரோவர் மிஸ் டீன் இந்தியா யுஎஸ்ஏ பட்டத்தை வென்றனர்." என்றார்.
மூன்று பிரிவுகளிலும் வெற்றி பெற்றவர்கள், அடுத்தாண்டு துவக்கத்தில் இதே அமைப்பு இந்தியாவில் மும்பையில் நடத்தும் உலகளாவிய அழகிப் போட்டியில் பங்கேற்க செல்வதற்கான பயண டிக்கெட்டுகளைப் பெற்றனர்.
கருத்துகள்