அடல் பிகாரி வாஜ்பாய் நினைவு தினத்தையொட்டி பிரதமர் மரியாதை
முன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாயின் நினைவு தினத்தையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“இன்று மதிப்புக்குரிய அடல்ஜியின் நினைவு தினத்தை முன்னிட்டு சதைவ் அடலுக்கு சென்று அவருக்கு மரியாதை செலுத்தினேன். இந்தியாவுக்கு சேவை புரிய அடல்ஜி மேற்கொண்ட முயற்சிகள் நம்மை ஊக்குவிக்கின்றன. இந்தியாவில் மாற்றத்தை ஏற்படுத்தி, 21ம் நூற்றாண்டின் சவால்களுக்கு நாட்டைத் தயார்ப்படுத்த அவர்,முயற்சிகளை முன்னெடுத்தார்”.முன்னாள் பிரதமர் பாரத ரத்னா அடல்பிகாரி வாஜ்பாயின் நினைவு நாளில் புதுதில்லியில் உள்ள நினைவிடத்தில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா மரியாதை
முன்னாள் பிரதமர் பாரத ரத்னா அடல்பிகாரி வாஜ்பாயின் நினைவு நாளான இன்று, புதுதில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா மரியாதை செலுத்தினார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
தாய் நாட்டின் பெருமையை பாதுகாக்க, அடல்ஜி தனது வாழ்நாளில் ஒவ்வொரு தருணத்தையும் செலவழித்தார். இந்திய அரசியலில் ஏழைகள் நலன் மற்றும் சிறந்த நிர்வாகத்துக்கான புதிய யுகத்தை அவர் தொடங்கினார். அதேசமயம், இந்தியாவின் வலிமையையும், துணிச்சலையும் உலகம் உணருமாறு அவர் செய்தார். அவரது நினைவு நாளில் அவருக்கு மரியாதை செலுத்தினேன். எனத் தெரிவித்தார்.
கருத்துகள்