அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கை விசாரித்து இரண்டு வாரங்களுக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்திய படி.
ஆகஸ்ட் பத்தாம் தேதி நடந்த விசாரணையில் இரு தரப்பு வாதங்களையும் முழுமையாகக் கேட்ட நீதிபதி இன்று விசாரணையில் சில கேள்விகள் மட்டும் கேட்ட நிலையில். இரு தரப்பு வாதங்களும் பதிவு செய்யப்பட்டன. விரைவில் இரு தரப்பிலிருந்தும் ஆவணங்கள் தாக்கல் செய்யப்படும். தொடர்ந்து தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பை ஒத்திவைத்த நீதிமன்றம்! நிரந்தர பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா எனக்கூறி கலைத்துவிட்டு அந்தப் பதவியை மீண்டும் உருவாக்கியது ஏன்? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
அ.தி.மு.க., பொதுக்குழு தொடர்பாக அதன் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், மற்றும் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்து வரும் நிலையில் இன்று விசாரணைக்கு வந்த போது, பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதத்தில், உரிய விதிகளைப் பின்பற்றாமல் பொதுக்குழு கூட்டப்பட்டது. 1.5 கோடி தொண்டர்களின் விருப்பத்தை 2600 பேர் செல்லாததாக்கும் வகையில் செயல்பட்டதாகக் கருத்து பதிவு செய்தார்.மேலும் ஐந்து ஆண்டுகள் உள்ள பதவி ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் அந்த
இரு பதவிகளும் காலியாக இல்லாமல் எப்படி பொதுக்குழுவைக் கூட்ட முடியும் மேலும் அதில் யாருக்கு அதிகாரம் உள்ளது என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் வாதத்தில், அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டலாம் என விதி உள்ளது. தேர்தல் விதி திருத்தத்திற்கு பொதுக்குழு ஒப்புதல் அளிக்காவிடில் இரு பதவிகளும் காலியாகிவிடும். ஒப்புதல் அளிக்காததால் இருவர் செயல்பட முடியவில்லை எனக் கூறுவது தவறு. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தான் இணைந்து பொதுக்குழுவைக் கூட்ட முடியும். மீண்டும் பொதுச்செயலாளர் பொறுப்பை உருவாக்குவது கட்சி விதிகளுக்கு விரோதமானது என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி பொதுக்குழுவை கூட்டியதில் விதிகள் முறையாக பின்பற்றப்படவில்லை, விதிகள் மீறப்பட்டிருப்பது தெரிந்தால் தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்படுமென்றார். இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் வாதத்தில், கட்சி ஒன்றும் நிறுவனமோ, சொசைட்டியோ அல்ல. கட்சி விதிப்படி பொதுக்குழு உச்சபட்ச அதிகாரம் கொண்டது. தலைமைக் கழக நிர்வாகிகள் பொதுக்குழுவை கூட்டியது தவறில்லை. பெரும்பான்மை உறுப்பினர்கள் கூறினால், இருவரும் இணைந்து பொதுக்குழுவை கூட்ட வேண்டும். பொருளாளர் தலைமை கழக நிர்வாகிகள் கட்சியை நிர்வகிக்க வழி வகை செய்கின்றன என்றார்.
அப்போது நீதிபதி, பொதுக்குழு கூட்டம் முறையாக நடத்தப்பட்டதா? நிரந்தர பொது செயலாளர் ஜெ.ஜெயலலிதா எனக்கூறி கலைத்து விட்டு, மீண்டும் அந்தப் பதவியை உருவாக்கியது ஏன் என கேள்விகள் எழுப்பினார்.
அதற்கு சசிகலா இடைக்காலப் பொது செயலாளராக தேர்வு செய்யப்பட்டதைக் குறிப்பிட்ட வழக்கறிஞர் விஜய் நாராயண் தொடர்ந்து , சசிகலா சிறை சென்றதால் அவரால் செயல்பட முடியாத நிலை ஏற்பட்ட போது பொதுக்குழு உறுப்பினர்கள் தான் பொதுக்குழுவைக் கூட்டினார்கள். பொதுக்குழுவில் ஒப்புதல் பெறாததால், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டன என்றார்.
அதற்கு நீதிபதி, பொதுக்குழு ஒப்புதல் பெறாததால் இரண்டு பதவிகளும் காலாவதி என்றால், பொதுக்குழு உறுப்பினர்களின் பதவிக்கான தேர்தலும் செல்லாதா எனக் கேள்வி எழுப்பினார். மேலும், கட்சியின் அமைப்பு சட்டம் மற்றும் துணை விதிப்படி தமிழ் மகன் உசேன், அவைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டாரா எனக் கேள்வியும் எழுப்பினார்
அதற்கு இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி தரப்பு வழக்கறிஞர், இருவரும் சேர்ந்து கையெழுத்திட்டுத் தான் தமிழ் மகன் உசேன் அவைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டார் என்றார்.
அதற்கு ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர், தமிழ்மகன் உசேனை முன்மொழியும் நேரத்தில் வெளிநடப்பு செய்ததாகவும், வழி மொழியவில்லை . எனவும் இதற்கு வீடியோ ஆதாரம் உள்ளதாகவும் கூறினார்.
பின்னர் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இரண்டு அல்லது மூன்று மாதங்களில் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. பொதுக்குழு உறுப்பினர்கள் நியமனம் செல்லும் எனக் கூறினார். தொடர்ந்து சட்ட வாதங்கள் நடந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, "மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை உருவாக்கியது ஏன்... பொதுக்குழுக் கூட்டம் கட்சி விதிப்படி நடத்தப்பட்டதா?" என்று கேள்விகளை முன்வைத்தார். இறுதியாக, ``பொதுக்குழு கூட்டியதில் கட்சி விதிகள் முறையாகப் பின்பற்றவில்லை எனத் தெரிந்தால் தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்படும். நிரந்தர அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் கட்சி விதிப்படி நியமிக்கப்பட்டாரா?” என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
கருத்துகள்