பொதுத்துறை அல்லாத தனியார் வலைப்பின்னல்கள் அமைக்கும் நிறுவனங்களுக்கு நேரடியாக அலைக்கற்றைகளை ஒதுக்குவதற்கு தொலைத்தகவல் தொடர்புத்துறை தேவைக்கான ஆய்வுகளை மேற்கொள்ளவிருக்கிறது
நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பாதுகாப்பான மிகவும் நம்பகமான, குறைந்த அளவு தாமதம் ஆகும். அதிகளவு தொடர்பை ஏற்படுத்தும் தொழில்களை உருவாக்குவதில் பொதுத்துறை அல்லாத தனியார் வலைப்பின்னல் அமைப்பு (சிஎன்பிஎன்) முக்கிய பங்கு வகிக்க முடியும். இத்தகைய வலைப்பின்னலுக்கு சட்டப்பூர்வ கட்டமைப்பை உருவாக்க 2022 ஜூன் 27 அன்று வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது.
இந்த வழிகாட்டு நெறிமுறைகள் படி பொதுத்துறை அல்லாத தனியார் வலைப்பின்னல் அமைப்பு அலைகற்றைகளை தொலைத்தகவல் சேவை வழங்குவோரிடமிருந்து குத்தகை அடிப்படையில் அல்லது தொலைத்தகவல் தொடர்புத்துறை யிடமிருந்து நேரடியாக பெற முடியும். சிஎன்பிஎன்-களால் அமைக்கப்படும் நிறுவனங்களுக்கு நேரடியாக அலைக்கற்றை ஒதுக்கீட்டிற்கான தேவை குறித்த ஆய்வுகளை தொலைத்தகவல் தொடர்புத்துறை மேற்கொள்ள வகைசெய்கிறது.
தேவை ஆய்வுகளை மேற்கொள்வதற்கான சரள்சஞ்சார் இணைப்பக்கத்தை இந்தத்துறை தொடங்கியுள்ளது. https://saralsanchar.gov.in என்ற இணையப்பக்கத்தில் முழுவிவரம் அறியலாம். இதற்கான உத்தரவு 09.08.2022 அன்று வெளியிடப்பட்டது.
தொலைத் தகவல் தொடர்புத்துறையில் இருந்து நேரடியாக அலைக்கற்றை பெற்று சிஎன்பிஎன்களை அமைக்க விரும்பும் ரூ.100 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள நிறுவனங்கள் இந்த நடைமுறையில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 10.08.2022 முதல் 09.09.2022 வரை இது குறித்த விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
கருத்துகள்