குடியரசு துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜெகதீப் தன்கருக்கு பிரதமர் வாழ்த்து
குடியரசு துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜெகதீப் தன்கருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள தொடர்ச்சியான ட்விட்டர் பதிவுகளில் தெரிவித்தருப்பதாவது:
“இந்தியாவின் குடியரசு துணைத் தலைவராக அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு ஜெகதீப் தன்கர் அவர்களுக்கு வாழ்த்துகள். தலைசிறந்த குடியரசு துணைத் தலைவராக அவர் செயல்படுவார் என்று நான் நம்புகிறேன். அவரது அறிவு மற்றும் புத்திசாலித்தனத்திலிருந்து நமது நாடு பெருமளவு பயனடையும்.”
திரு ஜெகதீப் தன்கருக்கு வாக்களித்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். விடுதலையின் அமிர்த பெருவிழாவை இந்தியா கொண்டாடி வரும் வேளையில் விவசாயத் திருமகனை குடியரசு துணைத் தலைவராகப் பெற்றிருப்பது பெருமை அளிக்கிறது.
அபாரமான சட்ட அறிவு மற்றும் அறிவுசார் திறனை அவர் பெற்றுள்ளார். குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்து வாக்குகள் எண்ணப்பட்டதில் 725 பேர் வாக்களித்த நிலையில். 92.94 சதவீதம் வாக்குகள் பதிவாயின. பாரதிய ஜனதா கட்சியில் வேட்பாளர் ஜெகதீப் தன்கர் 528 வாக்குகளையும் மார்க்கரெட் ஆல்வா 182 வாக்குகளையும் பெற்றுள்ளார்கள். 15 வாக்குகள் செல்லாத வாக்குகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஜெகதீப் தன்கர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டிருக்கிறார் . ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துப் பதிவிட்டுள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, 'இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஜெகதீப் தன்கருக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். உங்களின் நீண்ட வளமான பொதுவாழ்க்கை அனுபவம் நாட்டுக்கு பயனளிக்கும். வெற்றிகரமான பதவிகாலமாக இது அமையவும் வாழ்த்துகிறேன்.' என்று குறிப்பிட்டுள்ளார்
கருத்துகள்