குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவி ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதியுடன் நிறைவடைவதால் ஆகஸ்ட் மாதம் 6 ஆம் தேதியான இன்று குடியரசுத் துணைத் தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது
தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில் அதற்கான ஏற்பாடுகள் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது ஜூலை மாதம் 6 ஆம் தேதி தொடங்கிய குடியரசுத் துணைத் தலைவருக்கான வேட்புமனுத் தாக்கல் ஜூலை மாதம் 19 ஆம் தேதியுடன் முடிவடைந்ததில்
பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக மேற்கு வங்காள ஆளுநராக இருந்த ஜக்தீப் தன்கரும்
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக கர்நாடகாவைச் சேர்ந்த மார்கரெட் ஆல்வாவும் போட்டியிடுகின்றனறார்.
இன்று காலை 5 மணிக்குத் தொடங்கி நடந்த வாக்குப்பதிவு மாலை 5 மணியுடன் நிறைவடையும். பின்பு வாக்கு எண்ணிக்கை மாலையே நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் குடியரசு துணைத் தலைவர் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி பதவியேற்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்