பஞ்சாயத்து அலுவலகங்கள் மின்னணுமயமாக்கல்
மாநிலப் பட்டியலில் உள்ள பஞ்சாயத்து அலுவலகங்களுக்கு கணினிகளை வழங்குவது மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பொறுப்பாகும். எனினும், தேசிய கிராம வளர்ச்சித் திட்டத்தின் கீழ் மத்திய அதிகாரமளித்தல் குழுவின் ஒப்புதலின்படி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க குறிப்பிட்ட அளவு கணினிகளை பஞ்சாயத் ராஜ் அமைச்சகம் வழங்குகிறது. டிஜிட்டல் இந்தியா தொலைநோக்குப் பார்வையை அடையும் வகையில் தொலை தொடர்புத் துறை மூலம் பாரத் நெட் திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் நாட்டில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் அகண்ட அலைவரிசை இணைப்பு படிப்படியாக ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், மின்னணு பஞ்சாயத்து இயக்கத் திட்டத்தை அமைச்சகம் அமல்படுத்தி வருகிறது. பஞ்சாயத் ராஜ் அமைப்பின் பணிகளை மேலும் வெளிப்படையாகவும், பொறுப்புடையதாகவும், திறன்மிக்கதாகவும் செய்யும் நோக்கில் இது செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நடப்பு 2022-23ஆம் நிதியாண்டிற்கான மின்னணு கிராமிய பஞ்சாயத் ராஜ் வளர்ச்சி திட்டத்தில் இதுவரை 2.53 லட்சம் கிராம பஞ்சாயத்துகள் இணைக்கப்பட்டுள்ளன
இத்தகவலை மாநிலங்களவையில் மத்திய பஞ்சாயத் ராஜ் இணை அமைச்சர் திரு கபில் மோரேஷ்வர் படேல் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
கருத்துகள்