மனித வள மேம்பாட்டு அமைச்சகம் ஆஸ்திரேலிய திறன் மேம்பாடு மற்றும் பயிற்சித்துறை அமைச்சருடன்.தர்மேந்திர பிரதான் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்
மத்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சர் திரு.தர்மேந்திர பிரதான், மெல்பர்னில் உள்ள கங்கன் இன்ஸ்டிட்டியூட்டில், “தொழில்கல்வி மற்றும் பயிற்சி-எதிர்காலத்துக்கான திறன்களை வளர்த்தல்” என்ற தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டார். அவருடன், விக்டோரியன் திறன் மேம்பாட்டு ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு.கிரேக் ராபர்ட்சன், கங்கன் இன்ஸ்ட்டியூட்டின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி.சாலி கார்டன் மற்றும் ஆஸ்திரேலிய திறன் சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர்கள் பங்கேற்றனர்.
ஆஸ்திரேலியாவின் திறன் தர நிலைகள் மற்றும் சான்றளிப்பு கட்டமைப்புகளை இந்தியாவில் பயன்படுத்துவதை அடிப்படையாக கொண்ட இந்த கலந்துரையாடலில், இளைஞர்களை எதிர்கால திறன் மற்றும் வேலை வாய்ப்புடன் இணைத்து, திறன்களை வளர்க்கும் கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகளை வலுப்படுத்தவும் விவாதிக்கப்பட்டது.
அப்போது, திறமையான மற்றும் அதிக உற்பத்தி செய்யும் நாடாக இந்தியாவை மாற்றுவதற்காக, தொலைநோக்குப் பார்வையுடன் திரு.நரேந்திர மோடி மேற்கொண்டு வரும் முயற்சிகளை திரு.தர்மேந்திர பிரதான் பகிர்ந்து கொண்டார். இந்தியாவின் இளையதலைமுறையின் மக்கள்தொகை 21-ம் நூற்றாண்டின் மிகப்பெரிய பலமாக இருப்பதாகவும், இந்திய மற்றும் உலக பொருளாதார வளர்ச்சியில், திறமையான இந்தியா பங்களிக்கும் என்றும் அவர் கூறினார்.
கருத்துகள்