சிவகங்கை சமஸ்தானத்தின் இராணி வீரமங்கை வேலுநாச்சியார் ‘வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில் நாட்டிய நாடகத்தை'
தமிழகத்தின் கலைப்பண்பாட்டுத் துறை மூலம் ஓ.வி.எம்.தியேட்டர்ஸ் நிறுவனம் இணைந்து 62 நாடகக் கலைஞர்களுடன் பங்கேற்கும் இசையார்ந்த நாட்டிய நாடக நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது. தமிழகத்தின் முதல்வர் மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தொடங்கி வைத்துப் பார்வையிட உள்ளார். இதன் தொடர்ச்சியாக அணைத்து மாவட்டங்களிலும் வீரமங்கை வேலுநாச்சியார் இசையார்ந்த நாட்டிய நாடகத்தை நடத்தக் கேட்டு கொள்ளப்படுகிறது எனவும். வீரமங்கை வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வகையில் இசையார்ந்த நாட்டிய நாடகத்தை சென்னை, கலைவாணர் அரங்கில் இன்று மாலை 6.00 மணியளவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
இராமநாதபுரத்தை ஆண்ட சேதுபதி மன்னர் செல்லமுத்து சேதுபதி, ராணி முத்தாத்தாள் தம்பதியருக்கு 1730-ஆம் ஆண்டு வீரமங்கை வேலுநாச்சியார் மகளாகப் பிறந்தார். சிறு வயதிலேயே அனைத்துப் போர்ப் பயிற்சிகளையும் கற்றுத் தேர்ந்தார். வீரம் என்ற மூன்றெழுத்தை தன் மூச்சாகக் கொண்டு, பயம் அறியாதவராகத் திகழ்ந்தார். சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்து வடுகநாதத் தேவரின் முதல் மனைவி 1772-ஆம் ஆண்டு ஆங்கிலேயப் படையெடுப்பால் கணவரை இழந்தவருக்கு நாட்டை மீட்டெடுக்க வேண்டிய பெரும் பொறுப்பிருந்தது.
தங்கள் தளவாய் மற்றும் பிரதானிகளான மருது சகோதரர்கள் ஆதரவுடனும், மைசூர் அரசர் ஹைதர் அலி, விருப்பாச்சி கோபால நாயக்கர் ஆகியோரின் உதவியுடன் சிவகங்கை சமஸ்தானத்தின் மக்களை ஒன்று திரட்டி, வலுவான ஓர் எதிர்ப்புப் படையினை உருவாக்கி, ஏழாண்டுகள் இடைவிடாமல் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி எதிர்த்துப் போரிட்டு மாபெரும் வெற்றிப் பெற்று சிவகங்கை சீமையை மீட்டெடுத்தார். அதைத் தொடர்ந்து 1789-ஆம் ஆண்டு வரை சிவகங்கை சமஸ்தானத்தில் ஆட்சி செய்தார்.
வடஇந்திய ஜான்சி ராணிக்கு 75 ஆண்டுகளுக்கு முன்பே விடுதலைப் போராட்டத்தில் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய முதல் வீரப் பெண்மணி இராணி வீரமங்கை வேலுநாச்சியாராவார். தமது போர்ப்படைப் பிரிவில் பெண்களுக்கென்று தனிப்படை உருவாக்கி போர்களை எதிர்கொண்டார். வேலுநாச்சியார் போர்ப்படை தளபதியான ‘குயிலி’ ஆங்கிலேயருக்கு எதிரான ஆயுதக் கிடங்கு போராட்டத்தில் தன் இன்னுயிரையே ஆயுதமாக ஏந்தினார்.
விடுதலை வரலாற்றில் வீரம் நிறைந்த வீரமங்கை இராணி வேலுநாச்சியாருக்கு ஈடாக எவருமில்லை. சிவகங்கையில் ஆண்ட வீரமங்கை இராணி வேலுநாச்சியார் 25.12.1896 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். வீரத்திருமகளைப் போற்றுகின்ற வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் சிவகங்கை மாவட்டம், சூரக்குளத்தில் வீரமங்கை வேலுநாச்சியார் நினைவு மண்டபம்
வீரமங்கை வேலுநாச்சியார் என்ற ‘வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில் நாட்டிய நாடகத்தை கலைப்பண்பாட்டுத் துறை மூலம் ஓ.வி.எம்.தியேட்டர்ஸ் நிறுவனம் இணைந்து 62 நாடக கலைஞர்கள் பங்கேற்கும் இசையார்ந்த நாட்டிய நாடக நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ளது. முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தொடங்கி வைத்து பார்வையிடுகிறார்.
அதனைத் தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் 15.08.2022 அன்று சி.என்.சி.கல்லூரியிலும், மதுரை மாவட்டத்தில் 21.08.2022 அன்று இராஜா முத்தையா மன்றம் அரங்கிலும், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 22.08.2022 அன்று கலையரங்கத்திலும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 28.08.2022 அன்று இந்துஸ்தான் கல்லூரி அரங்கத்திலும் வீரமங்கை இராணி வேலுநாச்சியார் இசையார்ந்த நாட்டிய நாடக நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க வீரமங்கை வேலுநாச்சியார் இசையார்ந்த நாட்டிய நாடகத்தை அனைவரும் கண்டுகளிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறது. இதற்கான அனுமதி இலவசம்.
தமிழக அரசின் சார்பில் நடைபெறும் வீரமங்கை வேலுநாச்சியாரின் இசையார்ந்த நாட்டிய நாடக நிகழ்ச்சிகளில் அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.வீரமங்கை வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வகையில் இசையார்ந்த நாட்டிய நாடகத்தை சென்னை, கலைவாணர் அரங்கில் 13.08.2022 அன்று மாலை 6.00 மணியளவில் முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார்கள்.
கருத்துகள்