அதிமுகவின் முதல் நாடாளுமன்ற உறுப்பினர் மாயத்தேவர் (வயது 88) முதுமை உடல் நல குறைவால் இன்று காலமானார்.
பெரிய கருப்பத் தேவர்-பெருமாயி அம்மாளுக்கு மகனாக 1935-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி உசிலம்பட்டி அருகில் டி. உச்சப்பட்டி கிராமத்தில் பிறந்த மாயத்தேவர், பாளையங்கோட்டை தூய சவேரியார் மேனிலைப் பள்ளியிலும், இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்பை சென்னை பச்சையப்பன் கல்லூரியிலும், பின்னர் சென்னை சட்டக் கல்லூரியிலும் படித்தவர். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகறிஞராக தொழில் துவங்கியவர். திமுக பொருளாளரான எம்ஜிஆர் 14.10.1972-ல் கட்சியில் நீக்கப்பட்ட. பிறகு அதிமுக-வை துவங்கிய போது, திண்டுக்கல் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த திமுகவைச் சேர்ந்த ராஜாங்கம் மரணமடைந்த நிலையில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட போது தேர்தலை சந்திக்க அதிமுக முடிவு செய்தது.
அதிமுக சார்பில் வழக்கறிஞர் மாயத்தேவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆளும் கட்சியான . திமுக சார்பில் பொன் முத்துராமலிங்கம் வேட்பாளரான நிலையில் அதிமுக வேட்பாளர் மாயத்தேவரிடம் முதல் தேர்தல் என்பதால் 16 சின்னங்களைக் காட்டிய தேர்தல் அதிகாரி முன் இரட்டை இலைச் சின்னத்தை தேர்வு செய்தவர் மாயத்தேவர், இச்சின்னம் வெற்றியை குறிக்கும் என்றும் மக்களிடம் எளிதாக கொண்டு சேர்க்க முடியுமென்றும் எம்ஜிஆரும் ஏற்றுக்கொண்டார். அதன் வெற்றிக்குப் பின்னர் அதிமுகவின் சின்னமாக ஆனது.
1973 ஆம் ஆண்டு மே மாதம் இருபதாம் தேதி நடந்த இடைத்தேர்தலில்.அதிமுக வேட்பாளர் 2.6 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார். ஆளும் கட்சியான திமுக 93 ஆயிரத்துக்கும் சற்று அதிக வாக்குகள் பெற்று மூன்றாமிடத்துக்கு தள்ளப்பட்டது.
ஸ்தாபன காங்கிரஸ் வேட்பாளர் என்எஸ்வி சித்தனுக்கு இரண்டாமிடம் கிடைத்தது.அந்த வகையில் அதிமுகவுக்கு முதல் வெற்றியைப் பெற்றுத்தந்தவர் மாயத்தேவராவார். பின்னர், அ.தி.மு.க.விலிருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தார். அப்போதும் 1977 ஆம் ஆண்டு திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு பெற்றார். கடந்த 15 ஆண்டுகளாக அரசியலை விட்டு விலகியே இருந்து வந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை மதியம் 12.30 மணியளவில் காலமானார்
இறந்துபோன மாயத்தேவர் மனைவி சரஸ்வதி வாரிசாக கே.எம்.வெங்கடேசன், கே.எம்.சுமதி, கே.எம். செந்தில்குமரன் உள்ளனர். இவர்களில் மூத்த மகன் கே.எம்.வெங்கடேசன் இரண்டு வருடங்களுக்கு முன் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்து போனார். அவரது நல்லடக்கம் நாளை நடக்கிறது.
கருத்துகள்