காவிரி தேங்கும் மேட்டூர் அணையில் இன்று, இரண்டு லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது,
காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் தொடர் மழை வெள்ளப்பெருக்கு காரணமாக, தண்ணீர் வரத்து மேலும் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படும் நிலையில்.திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் காவிரிக், கொள்ளிடம் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது.
காவிரியில் இரண்டு லட்சம் கனஅடி தண்ணீர் வரத்து காரணமாக குமாரபாளையத்தில் 100 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது: பழைய பாலத்தில் கனரக வாகனங்கள் செல்வதற்கு தடை விதித்தது. இன்று காலை 8 மணியளவில் லேசான மழை பெய்தது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு, அலுவலகங்களுக்கு செல்லும் மக்கள் குடைபிடித்தவாறும் நனைந்தபடியும் சென்றனர். வானம் தொடர்ந்து மேகமூட்டமாகவே உள்ள நிலையில் மேட்டூர் அணையில் காவிரியில் வினாடிக்கு இரண்டு லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் குமாரபாளையம் பழைய பாலத்தில் லாரி, கார் மற்றும் கனரக வாகனங்கள் செல்ல தடை இருந்தும் இருசக்கர வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டது.
காவிரி ஆற்றில் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பனி ஆட்சிக் காலத்தில் பவானிக்கும் குமாரபாளையத்திற்குமிடையே கட்டப்பட்ட காவிரிப் பாலம், காலம் கடந்தும் உறுதியாக இருப்பதால் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. அகலம் குறைந்த பாலத்தில் வாகனங்களும் செல்ல அனுமதிக்கப்பட்டது. தற்போது காவிரி ஆற்றில்
வரும் மழை வெள்ளத்தால் குமாரபாளையம் நகராட்சி பகுதியில் உள்ள இந்திராநகர், மணிமேகலை தெரு, அண்ணாநகர், கலைமகள் வீதி ஆகிய பகுதிகளில் உள்ள 100 வீடுகளையும் அதிகப் படியாக மணிமேகலை தெருவில் 37 வீடுகளையும், கலைமகள் வீதியில் 35 வீடுகளையும், அண்ணாநகர் பகுதியில் சுமார் 15 வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இங்கு வசித்த 300 பேர், அரசு அமைத்த நிவாரண முகாமான ராஜேஸ்வரி திருமண மண்டபம், நடராஜா திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு உணவும், மருத்துவ வசதியும் செய்யப்பட்டுள்ளது.
தவிர மேட்டுக்காடு, சுண்ணாம்புச் சூளை பகுதிகளிலும் வெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகுந்துள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் வருவாய்த் துறையின் பணியாளர்களும் நகராட்சி ஊழியர்களும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதிகளை இன்று பிற்பகல் மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரேயாசிங் பார்வையிட்ட பின்னர் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்த நிலையில் முக்கொம்பு மேலணைக்கு, இரண்டு லட்சம் கன அடி தண்ணீர் வரத்து வருகிறது. இதில் 53, 187 கன அடி தண்ணீர் காவிரியிலும், 83,073 கன அடி கொள்ளிடம் ஆற்றிலும் முன்பு திறக்கப்பட்டுள்ளது. தற்போது இது காவிரியில் அதிகரிக்கும் நிலையில் பெருகி வரும் வெள்ளம் காரணமாக, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை மூடப்பட்டுள்ளது. பொது மக்கள் திதி, தர்ப்பணம் கொடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் காவிரி, கொள்ளிடம் படித்துறைகளில் குளிக்கவோ; கால்நடைகளை அழைத்துச் செல்லவோ வேண்டாமென்று மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ள நிலையில், காவிரியில் பெருகி வரும் வெள்ளம் காரணமாக, திருச்சிராப்பள்ளியை அடுத்த கல்லணை அருகில் உத்தமர்சீலி தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியுள்ளது. காவிரி வெள்ள நீர் தரைப்பாலம் வழியாக வழிந்து, கொள்ளிடம் ஆற்றுக்கு செல்கிறது. நீரின் வேகம் அதிகமாக இருப்பதால், கல்லணை - திருக்காட்டுப்பள்ளி- தஞ்சாவூர் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.மேலும், திருவளர்சோலை, பனையபுரம், உத்தமர்சீலி, கிளிக்கூடு கிராமங்களில் காவிரிக்கரையை ஒட்டியுள்ள வாழை உள்ளிட்ட பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மேட்டூர் அணையிலிருந்து இன்று, இரண்டு லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாலும், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாகவும், தண்ணீர் வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் காவிரி, கொள்ளிடம் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது
கருத்துகள்