முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சீறும் சிறப்புமாக நடைபெறவுள்ள அருள்மிகு தேனாட்சியம்மன் ஆலயத்தின் குடமுழுக்கு விழா

சீறும் சிறப்புமாக நடைபெறவுள்ள அருள்மிகு தேனாட்சியம்மன் ஆலயத்தின் குடமுழுக்கு விழா 


குன்றக்குடி திருவண்ணாமலை  ஆதீனத்தின் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான ஆலயம் 'கோவிலைத் தழுவிய குடிகள்: குடிகளைத் தழுவிய கோவில்’, ‘கடவுளைப் போற்று மனிதனை நினை’ என்பவை தான் அருள்நெறி ஆன்மிகத்தின் அடித்தளத்தில் நின்று கொண்டு மனிதத்தை மேம்படுத்தும் பணியில் குன்றக்குடி ஆதீனங்களில் பலரும் ம் ஈடுபட்டார்கள். மனிதத்தை மறந்து கடவுளைப் போற்றுதல் ஆன்மிகம் ஆகாது! கடவுளை மறந்து மனிதத்தைச் சிந்திப்பது வாழ்வியல் ஆகாது: கடவுளைப் போற்ற வேண்டும்; மனிதனை நினைக்க வேண்டும்.  தவத்திரு அடிகளார்" என்பது துறவியைக் குறிக்கும் அவர்கள் ஆண்மீக ஆளுமை 300 ஆண்டு காலம் நடத்திய ஆலயங்களில் சிறப்பு வாய்ந்த அம்மன் ஆலயம். 


 ஸ்ரீமான் ஹிரன்யகிரப இரவிகுல இராஜ முத்து விஜய இரகுநாத இராஜ இரகுநாத தேவ கிழவன் சேதுபதி. (1671–1710)  இராமநாதபுரம் சேதுபதி நாட்டின் அரசர் 1673 முதல் 1708 வரை ஆட்சி செய்தார். இராமநாதபுரம் சிற்றரசை வளர்த்து ஒரு சக்திவாய்ந்த இராஜ்யமாக மாற்றியவர் இவருக்கு 45 மனைவிகள் குழந்தைகள் இல்லை   கள்ளர் குலத்துப் பெண் கதலி  என்பவரைக் காதலித்து பின்னர் அவரையே 46 வதாகத் திருமணம் புரிந்தார்,

அவருக்கு பிறந்த மகள் தான் சிவகங்கையின் முதலாவது பட்டத்து இராணி அகிலாண்டேஸ்வரி நாச்சியார் பின்னர் தன் மனைவியின் சகோதரரான இரகுநாதனை புதுக்கோட்டையின் தொண்டைமானாக அறிவித்தார். இரகுநாதத்  தொண்டைமானாக்கி  அவரை திருமயம் பிரதானியான முன்னாள் சிவந்தெழுந்த பல்லவராயர்க்குப் பதிலாக மாற்றினார், பின்னர் இரகுநாதத் தொண்டைமான் புதுக்கோட்டையில் தொண்டைமான் வழி வம்சத்தை உருவாக்க முயன்றார். 



திருமெய்யம் பாளையக்காரரான சிவந்தெழுந்த பல்லவராயர்  சேதுபதி நாட்டின் வடக்கில் அமைந்திருந்த காவல் கோட்டம் அரணாகிய திருமெய்யம் கோட்டையின் பொறுப்பிலிருந்தவர். அப்பொழுது நிலவி வந்த குழப்பமான அரசியல் சூழ்நிலையை தனக்கு சாதகமாக மாற்றி சிவந்தெழுந்த பல்லவராயர் தஞ்சாவூர் மராட்டியருடன் இரகசியத் தொடர்பு கொண்டிருந்ததையறிந்த இரகுநாத சேதுபதி மன்னர் விசாரணைக்காக அவரைத் தமது இராமவிலாசம் அரண்மனையில் அமைந்துள்ள அரசவைக்கு அழைத்த பொழுது அவர் மறுத்ததால் அவரைக் கொன்றொழித்துவிட்டு அவரது பணிக்கு தனது மைத்துனர் இரகுநாதத் தொண்டைமானை கள்ளர் சீமைத் தலைவராகவும்  நியமனம் செய்தார்.





இவரது உடன் பிறந்தவரான காதலி நாச்சியார் என்பவரைச் சேதுபதி மன்னர் ஏற்கனவே  திருவண்ணாமலை ஆதீனத்தின் சன்யாசி திருச்சுழி ஆலயத்தில் வழங்கிய அருளாசியால் சேதுபதி தமது மனைவியாகக் கொண்டிருந்தார். அதற்கு தானமாக வழங்கப்பட்டது தான் இன்று உள்ள ஐந்து கோவில் தேவஸ்தானமும் அதில் ஒன்றான தேனாட்சி அம்மன் ஆலயமாகும் மற்றும் அதன் உப கோவில்களான சதுர்வேதி மங்கலம் மற்றும் இரண்டு இதனால் மன்னரது நம்பிக்கைக்கு உரியவராக புதுக்கோட்டை இரகுநாதத் தொண்டைமான் கருதப்பட்டார்.


என்றாலும் மன்னரது மைத்துனர் என்ற உறவையும் மீறித் திருமெய்யம் உள்ளிட்ட புதிய புதுக்கோட்டை தன்னரசினை அவர் ஏற்படுத்தினார். அதனால் சேதுபதி மன்னர் மிகுந்த சீற்றமடைந்த பொழுதிலும் தொண்டைமானைத் தண்டிக்க முற்படவில்லை. 46 வது மனைவி கதலி நாச்சியாரின் வேண்டுதல் ஒருபுறமும், தெற்குச் சீமையில் எழுந்த கலவரங்களும் மன்னரை மற்றொரு புறமுமாகத் தடுத்துவிட்டன. கீழாநிலைக்கோட்டையும், திருமயம் கோட்டையும், பட்டுக்கோட்டையும்       நாலுகோட்டையும், திருப்பத்தூர் கோட்டையும், வாராப்பூர் கோட்டையும் கடல் வழி தொண்டித் துறைமுகமும் அரணாக உள்ள சேதுபதி சீமையின் வடக்குப் பிராந்தியம்




கிழவன் சேதுபதி என்ற இரகுநாத சேதுபதி மன்னர் காலத்தில் மருமகனுக்கு சிவகங்கையும், மைத்துனருக்கு புதுக்கோட்டையுமென ஐந்து பகுதிகளில் இரண்டு பகுதிகள் பிரித்து வழங்கப்பட்டது போக மூன்று பகுதிகள் சேதுபதி மன்னர் வழியிலிருந்தது. மன்னருக்கு அருளாசி வழங்கி அதன் பலனாக அமைக்கப்பட்டது தான்  குன்றக்குடி, திருவண்ணாமலை ஆதினம் அது தோன்றிய வரலாறு பழமையானது.   சேதுபதி மன்னர் வழங்கிய அருட்கொடை ஐந்து கோவில் தேவஸ்தானம் கொண்ட ஏழு ஆலயங்கள். பெருமை வாய்ந்த  17 வது திருவண்ணாமலை மடாதிபதி நாகலிங்க தேசிக குருமூர்த்திகள் திருவண்ணாமலையிலிருந்து  திருத்தல யாத்திரை செய்ய இராமேஸ்வரம் வர திருவுள்ளம் கொண்டு திருச்சுழியில் உள்ள சிவன் ஆலயத்தில் உள்ள மடத்தில் எழுந்தருளினார்.   தீர்த்தமாடிச் சிவனார் உறையும் திருக்கோயில்களை வலம் வந்து வழிபாடு செய்து மகிழ்ந்தார்.  ஆங்கு  அறிஞர்களும், சான்றோர்களும்




மெய்யன்பர்களும் குருநாதரை வரவேற்றனர்;  17 வது குருமூர்த்திகள் திருமுதுகுன்றம், சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர், திருப்பெருந்துறை, திருவாடானை, காளையார்கோயில் முதலிய திருத்தலங்களை வழிபட்டுத் தான் பின்னர் திருச்சுழியலுக்கு எழுந்தருளினார்கள். இச்செய்தியறிந்த இராமநாதபுரம் மன்னர் இரகுநாத சேதுபதி (கி.பி. 1675—1710) மகிழ்ச்சி கொண்டார்.  குருமூர்த்திகளின் பெருமையை முன்பே தெரிந்து வைத்திருந்த  சேதுபதி மன்னர்., உடனே திருச்சுழியலுக்கு வந்து குருமூர்த்திகளைக் கண்டு கொண்டு அருளாசி பெற திருவடிகளில்  வணங்கினார்.  இராமேசுவரத்திற்கு எழுந்தருள வேண்டும் என்ற குருமூர்த்திகளிடம் தமது விருப்பத்தை உரைத்த மன்னர், உடனே அதற்கு ஆவன செய்தார்.  மன்னர் பரிவாரங்களுடன்  புடைசூழ, குருமகாசந்நிதானம் இராமேசுவரம் சென்று, தீர்த்தமாடி இறை வழிபாடு செய்து திரும்பினார்கள். இவ்வாறு திரும்பிய நிலையில் மன்னர், வேண்டுகோளை ஏற்று சேதுபதி சீமையிலேயே பிரான்மலை எனும் பரப்புமலையில்

அருள்மிகு மங்கை பாகர் திருத்தலத்தில் சுவாமிகள் தங்கி மடம் அமைத்து அருளாட்சி புரிய வேண்டும் என்று வேண்டினார்;  பொன்னும் மணியும் காணிக்கையாகச் செலுத்தினார்.  ஐந்துடன் இரண்டு சேர்ந்த ஆலயங்களைத் தானமாகத் தந்த சேதுபதி மன்னரின் வேண்டுதலைக் 17 வது குருநாதர் கருணையுடன் ஏற்று கி.பி. 1690 ஆம் ஆண்டு  கொடுங்குன்றம் எனும் பரம்புமலை ஆகிய பிரான்மலையில் தொடங்கி நடந்து வந்த மடாலயம் தான் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தானம். 17 வதாக வந்த ஆதீனம் வழியில் தொடர்ந்து அருளாட்சியில் எழுந்தருளியிருந்த குருமூர்த்திகளுக்குப் பின்னர் 




 18. வயது திருவருள் திரு குமரசாமி தேசிகர்

19. வது திருவருள் திரு திருச்சிற்றம்பல தேசிகர் 

20. வது திருவருள் திரு சிதம்பரநாத தேசிகர்

21. வது திருவருள் திரு சிவக்கொழுந்து தேசிகர்

22. வது திருவருள் திரு நமச்சிவாய தேசிகர்

23. வது திருவருள் திரு அகத்தீசுவர தேசிகர்

24. வது திருவருள் திரு பொன்னம்பல தேசிகர் I

25. வது திருவருள் திரு ஏகாம்பர தேசிகர்

26. வது திருவருள் திரு வைத்தியநாத தேசிகர்

27. வது திருவருள் திரு அண்ணாமலை தேசிகர்  I

28.வது திருவருள் திரு ஞானப்பிரகாச தேசிகர்

29. வது திருவருள் திரு ஆறுமுக தேசிகர் 

30. வது திருவருள் திரு திருச்சிற்றம்பல தேசிகர் II

சுவாமிகள் வரை 







பிரான் மலையிலிருந்து அருளாசி புரிந்த குருமூர்த்திகளில் பலர் மிகக் குறைவான காலமே அருளாசி செய்தவர்கள் காலத்தில் பிரான்மலையில் ஆதீனத் திருமடம் நிறுவப் பெற்றது.  பிரான்மலை, (பிரான்மலை உட்கடைக்கோவில் சதுர்வேதமங்கலம்) திருப்புத்தூர், திருக்கோளக்குடி, குன்றக்குடி, தேனாச்சியம்மன் கோவில் ஆகிய ஐந்து கோயில்களுக்கும் சேதுபதி மன்னர் தானம் வழங்கிய காலம் தொட்டு ஆதீன பரம்பரை அறங்காவலர்களாக இருந்து அருளாசி செய்து வருகின்றனர். ஆதீனத்தில் எழுந்தருளியிருந்த குருமூர்த்திகள் அனைவரும் அருளும் தவமும் அறமும் நிறைந்தவர்களாக விளங்கினர்.



28-ஆவது பட்டம் ஞானப் பிரகாச தேசிகர் குன்றக்குடி அருள் தரு சண்முகநாதப் பெருமான் மீது மிகுந்த ஈடுபாட்டின் காரணமாகவே 29-ஆம் பட்டம் குருமூர்த்திக்கு ஆறுமுகதேசிகரெனத் தீட்சாநாமம் பெற்ற நிலையில்.  28-ஆம் பட்டம் ஞானப்பிரகாச தேசிகர் அவர்கள் முதல் 30—ஆம் பட்டம் திருச்சிற்றம்பல தேசிகர் அவர்கள் வரை பிரான்மலையில் இருந்து கொண்டு அருளாட்சி புரிந்து வந்த போதிலும் அவர்கள் அனைவருக்கும் குன்றக்குடிப் பெருமான் மீது ஈடுபாடு மிகுந்து வரலாயிற்று.  திருவருள் திரு மருதநாயக தேசிகர் காலம், சிவகங்கைச் சீமையையாண்ட தளவாய் பிரதானிகளான மன்னர் மருது பாண்டியர் குன்றக்குடி அருள்மிகு சண்முகநாதன் திருக்கோயிலை இப்போதிருக்கும் நிலையில் பெரிய அளவில் திருப்பணி செய்து சாந்துப்புலவரைக் கொண்டு



மயூரகிரிக்கோவையையும், (கி.பி. 1778) செய்வித்துத் தனிப்பெருமை சேர்த்திருந்த காலம்.  எனவே, மருதநாயக தேசிக குருமூர்த்திகளால் பிரான்மலையிலிருந்த காளத்தியப்பர் குன்றக்குடித் திருமடத்துக்கு எழுந்தருள்விக்கப் பெற்றார்.  அக்காலம் முதல் திருவண்ணாமலை ஆதீனமடாலயம் குன்றக்குடியில் திகழ்கிறது.  31—ஆம் பட்டம் திருவருள் திரு மருதநாயக தேசிகருக்குப் பின் கி.பி. 1860 வரை குன்றக்குடியிலிருந்து அருளாட்சி புரிந்து வந்த குருமூர்த்திகள் பலர் அதன் விபரம் வருமாறு:

32.வது திருவருள் திரு தண்டவராய தேசிகர் II

33. வது திருவருள் திரு சிவசுப்பிரமணிய தேசிகர்

34. வது திருவருள் திரு சாம்பசிவ தேசிகர்

35. வது திருவருள் திரு ஆறுமுக தேசிகர் II

36. வது திருவருள் திரு அருணாசல தேசிகர் I

37. வது திருவருள் திரு பொன்னம்பல தேசிகர் II

இவர்கள் அனைவரும் மிகச் சிறந்த அருளாளர்களாக விளங்கினர்.  சைவமும், தமிழும் தழைத்தினிதோங்கப் பெரும்பணிகள் புரிந்தனர்.

38-ஆம் பட்டம் பெரிய ஆறுமுக தேசிகர் (கி.பி.1860—1889)

39-ஆம் பட்டம் ஆறுமுக தேசிக சுவாமிகள் (கி.பி.1890—1893)

40 ஆம் பட்டம் தாண்டவராய தேசிகசுவாமிகள் (கி.பி.1893—1902.)             41 ஆம் பட்டம் நடராச தேசிக சுவாமிகள் (கி.பி.1902—1905)    40 ஆம் பட்டம் தாண்டவராய தேசிகசுவாமிகள் (கி.பி.1893—1902)

42 ஆம் பட்டம் அண்ணாமலை தேசிக சுவாமிகள் (கி.பி.1905—1928)



    43 ஆம் பட்டம் பொன்னம்பல தேசிக சுவாமிகள்(கி.பி.1928—1946)

44 ஆம் பட்டம் ஆறுமுக தேசிக சுவாமிகள் (கி.பி.1946—1952)   தொடர்ந்து 45 ஆம் பட்டத்தில் தவத்திரு தெய்வசிகாமணி தேசிகர் அடிகளார் அதன் பின்னர் தற்போது 46 வது பட்டம் தவத்திரு பொன்னம்பல தேசிகர் அடிகளார் நிர்வாக ஆளுகைக்கு உட்பட்ட அருள்மிகு தேனாட்சியம்மன் ஆலயத்தில் குடமுழுக்கு விழா ஆலயத்தின் வரலாற்றுப் பார்வை:- ஆற்றிலே வந்த அம்மன்

ஒருகாலத்தில் வற்றாத நதியாக ஓடிக்கொண்டிருந்த தேனாற்றில் கண்டெடுக்கப்பட்ட அம்மன்  தேனாற்று அம்மன்.

 சிராவயல் புதூர் கிராமத்திலிருக்கும் திருத்தலம் அருள்மிகு தேனாட்சியம்மன் கோவில். சிராவயல் புதூரைச் சேர்ந்த ஆயர் குலத்து பெண் ஒருவர், தினமும் தலைச் சுமையாய் மோர்ப் பானையைத் தூக்கிச் சென்று பக்கத்து ஊர்களில் விற்றுவிட்டு திரும்பி வருகிறபோது மோர்ப்பானை, உழக்கு, கரண்டி இவற்றை தேனாற்றில் கழுவி எடுத்துச் செல்வது வாடிக்கை.

ஒருநாள் அப்படி பானையைக் கழுவிக்கொண்டிருந்தபோது ஆற்றுக்குள் மார்பளவு தண்ணீரில் அம்மன் சிலை ஒன்று நிற்பதைக் கண்டார். பக்திப் பரவசத்தில் கைகூப்பி அம்மனை வனங்கியவர், ஊருக்குள் ஓடினார். ஊரார் வரும்வரை அப்படியே அம்மன் சிலை நின்றதாக நம்பப்படுகிறது. ஆற்றுக்குள் இருந்த அம்மன் சிலையைக் கரைக்குக் கொண்டு வந்தவர்கள் பின்னர் அம்மன் வழிகாட்டுதல் படியே ஒரிடத்தைத் தேர்ந்தெடுத்துப் பிரதிஷ்டை செய்தனர்.

தேனாற்றில் கண்டெடுத்த தெய்வம் என்பதால் அம்மனுக்கு ‘தேனாற்று நாச்சி’ என்று பெயர் சூட்டினார்கள். பிறகு அதுவே தேனாட்சியம்மனாக மருவி அழைக்கப்படுகிறது. அந்தக் கோவிலைச் சுற்றி  இரு கிராமம் உருவானது. அது அம்மன் பெயராலேயே தேனாட்சியம்மன் கோயில் என்றானது. அம்மனைக் கண்டெடுத்த இடையர் குலப்பெண், அச் சம்பவத்துக்குப் பிறகு அம்மனே கதி என்று . உணவு, உறக்கம் மறந்து அம்மனே பித்தாகக் கிடந்து முக்தியடைந்ததன் பிறகு, அம்மனுக்கு எதிரே இடையர் குலப் பெண்ணுக்கும் சிலை வைத்த மக்கள், அதை இடைச்சி அம்மனாக வழிபடத் தொடங்கினார்கள்.

ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியின்போது பூச்சொரிதல், பால்குடம் உள்ளிட்ட வைபவங்கள் அம்மனுக்கு அதிவிமர்சையாக நடைபெறுகின்றன. குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை அம்மனுக்குப் பத்து நாள் செவ்வாய் திருவிழாவும் நடக்கிறது. ஆலயத்தில் உள்ள காளி அம்மன் பக்தி வாய்ந்த நிலையில் உள்ளது. அணைவரும் வழிபட்டு வந்தால் நல்லது நடக்குமென நம்பிக்கை உண்டு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...