அகில இந்திய வானொலியில் பணி புரிந்து ஓய்வு பெற்ற பிரபல செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணஸ்வாமி இன்று மும்பையில் காலமானார்.
அவருக்கு வயது 87 நமது தாயகத்தில் மக்கள் மத்தியில் 1970 காலகட்டத்தில் வானொலியில் செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண சுவாமி! இந்த உலகில் அழகால் அறியப்படுபவர்களுக்கு மத்தியில் குரலால் அறியப்பட்டு, அழியாப் புகழ் பெற்றவர்களில் முக்கியமான ஒருவர் தான் அகில இந்திய வானொலியின் முன்னாள் செய்தி வாசிப்பாளரான கலைமாமணி சரோஜ் நாராயண சுவாமி.சென்ற தலைமுறைத் தமிழர்கள், கண்ட கேட்ட தஞ்சாவூர் பூர்வீகமாகக் கொண்ட மொழி அறிஞர் டில்லியிலிருந்து ஒலிபரப்பாகும் தமிழ்ச் செய்திகளை இவரது கம்பீரமான குரலுக்காகவும், உச்சரிப்புக்காகவும் விரும்பிக் கேட்டிருக்கிறார்கள்.
இப்போது மும்பையில் வசிக்கும் சரோஜ் நாராயணசுவாமி இந்த வயதிலும் முதுமையின் சுவடுகள் எதுவும் முகத்தில் தெரியாமலும், அதே கம்பீரமான குரலுடனும் பேசிய நிலையில் இன்று காலமானார் அவருக்கு நமது பப்ளிக் ஜஸ்டிஸ் இதழ் சார்பில் இறுதி அஞ்சலி செலுத்துவோம்
கருத்துகள்