முன்னால் அமைச்சரான வேலுமணிக்கு சில மூத்த மத்திய அரசு வழக்கறிஞர்கள் வந்து வாதாடுவதால் தான் அரசின் சார்பில். எதிர்ப்பு.
ஊழல் வழக்கில் முன்னால் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சார்பில் ஆஜரான கூடுதல் ஜொலிஸ்ட்ரெல் ஜெனரல் எஸ்.வி.ராஜுவுக்கு தமிழ்நாடு அரசின் வழக்கறிஞர்கள் தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், அவருக்குத் தடை விதிக்க உயர்நீதிமன்றம் புதன்கிழமை மறுத்துவிட்டது.
நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, பிவி நாகரத்னா தமிழக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான ஊழல் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நடவடிக்கைகள் குறித்து உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை வாய்மொழியாகக் கடுமையாக அவதானித்துள்ளது. (DVAC vs.எஸ்.பி.வேலுமணி மற்றும் ors)
நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி மற்றும் பி.வி. நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த விவகாரத்தில் தங்களுக்கு நிறைய விஷயங்கள் உள்ளன, ஆனால் திங்கள்கிழமை இந்த வழக்கை அடுத்ததாக விசாரிக்கும் உயர் நீதிமன்றத்தின் முன் அதன் முடிவுக்காகக் காத்திருப்பதாகக் கூறியது.
"என்ன மாதிரியான உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன? நாங்கள் நிச்சயமாக நிறையச் சொல்ல வேண்டும். சில பெரிய வக்கீல்கள் வந்து வாதிடுகிறார்கள் என்பதற்காக, எந்த முகாந்திரமும் இல்லை பின்பற்றப்பட்ட நடைமுறைகள் உயர்நீதிமன்றத்தைப் பற்றி நிறைய பேசுகின்றன," என்று நீதிபதி ரஸ்தோகி குறிப்பிட்டார்.
உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதி விசாரிக்கும், உயர் நீதிமன்றத்தின் நடவடிக்கைகளின் முடிவு உச்ச நீதிமன்றத்தில் தற்போதுள்ள மனுவுக்கு உட்பட்டது. மேலும் இந்த வழக்கில் நோட்டீஸ் அனுப்பியது பெஞ்ச்.
உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கை விசாரித்து வரும் தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரி செப்டம்பர் மாதம் 13 ஆம் தேதி ஓய்வு பெறுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஊழல் வழக்கு தொடர்பாக வேலுமணியின் ரத்து மனுவை பட்டியலிட மறுத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் ஊழல் தடுப்பு இயக்குனரகம் (டிவிஏசி) தாக்கல் செய்த மனுவை, பெஞ்ச் விசாரித்தது.
மாநில அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான பெஞ்ச் முன் வியாழக்கிழமை இந்த விவகாரம் குறிப்பிடப்பட்டது.
இந்த வழக்கை உரிய பெஞ்ச் முன் குழுவில் உள்ள முதல் வழக்காக நாளை பட்டியலிடுமாறு தலைமை நீதிபதி உத்தரவிட்ட பின்னர் நீதிபதி ரஸ்தோகி தலைமையிலான அமர்வு முன்பு பட்டியலிடப்பட்டது. பிரதிவாதிகள் சார்பில் மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா ஆஜரானார்.
இந்த வழக்கில் தமிழக அரசு கடும் ஆட்சேபனை தெரிவித்த நிலையில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் (ஏஎஸ்ஜி) எஸ்.வி.ராஜூ இந்த வழக்கில் எஸ்.பி.வேலுமணி சார்பில் ஆஜராக தடை விதிக்க உயர்நீதிமன்றம் புதன்கிழமை மறுத்துவிட்டது.
தலைமை நீதிபதி பண்டாரி மற்றும் நீதிபதி என்.மாலா ஆகியோர் அடங்கிய அமர்வு, வேலுமணி சார்பில் ஆஜராக மத்திய அரசின் அனுமதி இருக்கும் வரை ஏ.எஸ்.ஜி.ராஜு, இந்த வழக்கில் ஆஜராவதைத் தடுக்க முடியாது என்றும் கூறியது.
முந்தைய விசாரணையில், எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த ரத்து மனுக்களை தலைமை நீதிபதி அமர்வு விசாரிக்கவும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்று அட்வகேட் ஜெனரல் ஆர்.சுண்முகசுந்தரம் வாதிட்டார். கடந்த ஆண்டு சென்னை மற்றும் கோயமுத்தூரில் டி.வி.ஏ.சி.யால் தன் மீது பதிவு செய்யப்பட்ட இரண்டு எப்ஐஆர்களை ரத்து செய்ய வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் வேலுமணி கோரினார்.
2019-ஆம் ஆண்டு, சென்னை மற்றும் கோயமுத்தூர் மாநகராட்சிகளின டெண்டர்கள் வழங்கியதில் ஊழல், அதிமுக ஆட்சிக் காலத்தில் வேலுமணி உள்ளிட்டோர் ஈடுபட்டதாக எழுந்த மனுவைத் தொடர்ந்து, அந்த புகார்களை விசாரிக்க காவல்துறை கண்காணிப்பாளர் ஆர்.பொன்னியை உயர் நீதிமன்றம் நியமித்தது. அடையாளம் காணக்கூடிய குற்றம் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என்பதை அறியலாம்.
அதிகாரி 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முன்னாள் அமைச்சருக்கு க்ளீன் சிட் கொடுத்தார், ஜனவரி மாதம் 2020 ஆம் ஆண்டில், ஆரம்ப விசாரணை அறிக்கையை அப்போதைய எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையிலான அரசாங்கம் ஏற்றுக்கொண்டது. இருப்பினும், தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, மே மாதம் 2021 ஆம் ஆண்டில், டி.வி.ஏ.சி முன்னால் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக இரண்டு எஃப்.ஐ.ஆர்.களைப் பதிவு செய்ததையடுத்து அதை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தை அணுகினார்.ஊழல் செய்வதில் சாதனை படைத்தவர் எஸ்.பி.வேலுமணி. இவருக்கு பாஜக ஆதரவு பரிபூரணமாக இருந்தது என்பதற்கு பல உதாரணங்களைச் சொல்ல முடியும் என்றாலும், இன்றைக்கு மத்திய அரசின் சொலிசிடர் ஜெனரலாக உள்ள எஸ்.வி.ராஜி முன்னால் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரானது அதிர்வை ஏற்படுத்தியதுடன்.
அதிமுக ஆட்சி காலத்தில் எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த போது சென்னை, கோவை உள்ளிட்ட மாநகராட்சிகளில் ரூ.2704 கோடி மதிப்பிலான கட்டுமான பணியில் டெண்டர் விட்டதில் பெரிய அளவில் முறைகேடு நடந்து இருப்பதாக அறப்போர் இயக்கம் வழக்கு தொடுத்து இருந்தது.
மேலும், ஒரே ஐபி எண்கள் கொண்ட கம்ப்யூட்டரில் இருந்து சகோதர நிறுவனங்களின் பெயர்களில் இருந்து டெண்டர்கள் கோரப்பட்டுள்ளதையும் அது குறிப்பிட்டு இருந்தது. அப்படி டெண்டர் நிறுவனங்கள் குறுகிய காலத்தில் அசுரவளர்ச்சி அடைந்துள்ளன. பலநூறு கோடி மதிப்புள்ள ஒப்பந்தங்கள் முறைகேடாகக் கொடுக்கப்பட்டுள்ளன, முன்னால் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு வேண்டப்பட்டவர்கள் என்பதற்காக டெண்டர் விதிமுறைகள் தாராளமாக தளர்த்தித் தரப்பட்டுள்ளது. இதில், பல கட்டங்களில் பெரும் பணம் விளையாடியுள்ளது. தார்ச் சாலை போடுவதில் 50 சதவீதத்திலிருந்து 100 சதவீதம் அதிகமாக நிர்ணயம் செய்து கொடுத்தனர். மழை நீர் வடிகால் கால்வாய் அமைப்பதில் ஊழல், அரசு நிலத்தை ஆக்கிரமித்து அம்மா ஐ.ஏ.எஸ் அகடாமி நடத்திய ஊழல்.. என பல முறைகேடுகளின் பட்டியலை அறப்போர் இயக்கம் விலாவாரியாக தெரிவித்திருந்தது.
இதைத் தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழக ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர்னர் எஸ்.பி.வேலுமணிக்குச் சொந்தமான 59 இடங்களில் சோதனை நடத்தினர். அந்தச் சோதனையில் 11 கிலோவுக்கும் அதிகமான தங்கம், 118 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் 34 லட்சம் கிரிப்டோ கரன்ஸி முதலீடு, ரொக்கமாக பல லட்சங்கள் சிக்கின. இவை எல்லாம் அவர் செய்த ஊழல்களுக்கு ஒரு சிறு சிறு துளி தான் ஆனாலும், கம்யூட்டர், லேப்டாப் உள்ளிட்ட மின்னனு ஆதாரங்களையும் அப்போது கைபற்றினர். எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட 17 பேர் மீது ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு துறையால் வழக்கும் பதியப்பட்டது.
இதை எதிர்த்து எஸ்.பி.வேலுமணி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கில் இன்றைக்கு உயர் நீதிமன்றத்தில் ஊழல் அமைச்சர் வேலுமணிக்கு ஆதரவாக – தமிழக அரசின் லஞ்ச ஒழிப்பு துறைக்கு எதிராக – மத்திய அரசின் சொலிசிடர் ஜெனரல் ஆஜரானதை எப்படிப் புரிந்து கொள்வது? இதற்கு மத்திய அரசு எப்படி அனுமதி கொடுத்தது..? என நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் மத்தியில் அதிர்ச்சியும், வியப்பும் எழுந்தது.
தமிழக அரசின் வழக்கறிஞர் சண்முக சுந்தரம் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ”இது முறையற்றது. இவ்வாறு எஸ்.பி.வேலுமணிக்கு ஆதரவாக மத்திய அரசின் சொலிசிடர் ஜெனரல் ஆஜராவதற்கு மத்திய அரசு தந்துள்ள அனுமதியை ரத்து செய்ய தமிழக ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவோம்” எனவும் தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
வேலுமணி நாடறிந்த அராஜகமான ஊழல் பேர்வழி! ‘அவர் எப்படியெல்லாம் ஊழல் செய்தார்’ என கோயமுத்தூர் வாசிகளிடம் கேட்டால் கொட்டித் தீர்ப்பார்கள்!
கோயமுத்தூர் மாநகரத்தினுடைய குடிநீர் விநியோகிக்கும் உரிமையை சூயஸ் என்ற வெளிநாட்டு நிறுவனத்திற்கு 26 ஆண்டுகால ஒப்பந்ததில் கையெழுத்திட்டு கொடுத்தது.
தமிழக உள்ளாட்சி மற்றும் நகராட்சித் துறைகளின் கீழ் உள்ள அலுவலகங்களில் தினசரி லஞ்சம் வசூலித்து ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் கப்பம் கட்ட வேண்டும் என்ற கறார் உத்தரவுகள்!
பல ஆண்டுகளாக மாநகராட்சிகளில் துப்புரவு பணி செய்த எளிய சுகாதாரப் பணியாளர்களை நிரந்தரப்படுத்த லட்சங்களில் லஞ்சம் பெற்றது!
இதை வசூலிக்க மாவட்டந்தோறும் பயணம் செய்து கோடிக்கணக்கில் கப்பத்தொகையை வசூலிப்பதற்கென பெரும் அடியாள் பட்டாளம்…!
டாஸ்மாக் மதுபானங்களை கள்ள மார்கெட்டில் விற்பனை செய்வது…!
என சட்ட விரோத, சமூக விரோத சாம்ராஜ்யத்தை நடத்தியவர் தான் எஸ்.பி. வேலுமணி!
இந்த ஆதாரங்களின் அடிப்படையில், இலஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி.வேலுமணிக்குத் தொடர்புள்ள 59 இடங்களில் சோதனை நடத்தி ஓராண்டு ஆகியும், அவரை மாநில அரசு கைது செய்ய முடியாமல் இருந்ததற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, மத்திய அரசு மூலமாக அவர் செய்து கொண்டிருக்கும் அரசியல்‘லாபி’ என்றும் சொல்லப்படுகிறது.
வெள்ளியங்கிரி மலை சார்ந்த நேசத்திற்கும், நெருக்கத்திற்கும் உரியவாரான வேலுமணி,‘சத்ரு சம்கார யாகங்கள் பலவற்றையும் செய்து கொண்டிருக்கிறார் என்பதும் கவனத்திற்கு உரியது.
இலஞ்ச ஒழிப்புத்துறை பதிவுசெய்துள்ள முதல் தகவல் அறிக்கை, வெளியாகியுள்ள ஆதாரங்கள் அடிப்படையில் பார்த்தால், எஸ்.பி.வேலுமணி செய்திருப்பது சாதாரண ஊழல் இல்லை. பொதுப் பணத்தை அசுர பலத்துடன் ஈவு இரக்கமின்றி ‘ஸ்வாகா’ செய்துள்ளார்!
இப்படிப்பட்ட வேலுமணிக்கு பின்னணியில் சர்வ அதிகாரம் படைத்தவர்கள் கரிசனத்திற்கு உரியவராக அவர் இருக்கிறாராரோ. என்று மக்கள் பேசும் நிலையில்
இதற்கு அடையாளமாகத் தான் மத்திய அரசின் சொலிசிடர் ஜெனரல் வேலுமணி சார்பாக ஆஜராக அனுமதி அளிக்கப்பட்டதோ… என்ற சந்தேகங்கள் வலுப் பெற்றுள்ளன! ஊழலுக்கு எதிரான பாஜக அரசில் ஊழலுக்கே இடமில்லை..” என்றெல்லாம் பிரச்சாரம் செய்யப்படுகிறது. எனில் வேலுமணியை காப்பாற்ற மத்திய அரசின் சொலிசிடர் ஜெனரலே களம் காண்பது ஏன்? என்ற கேள்வியை சமூகத்தில் பலரால் தவிர்க்க முடியவில்லை.
இது குறித்து ஒரு மூத்த சட்ட வல்லுனரிடம் பேசிய போது, ”சட்டப்படி பார்த்தால், இப்படிச் செய்யத் தடையில்லை. ஆனால், தார்மீக ரீதியாக பார்க்கும் போது இது மிகப் பெரிய தவறு. மத்திய அரசின் சொலிசிடர் ஜெனரலுக்கான வேலையல்ல இது. ஆனால், மத்திய அரசின் அனுசரணை இல்லாமல் அவர் களம் கண்டிருக்க முடியாது. ஒரு வகையில் பாஜக அரசு இதில் அம்பலப்பட்டுவிட்டது என கருதலாம்” என்கிறார். ஆக ஊழல் ஒழிப்பு 200 ரூபாய் லஞ்சம் வாங்கும் நபர்கள் மீது மட்டும் தானா என்று பலரும் பேசுவது ஒரு சிலர் எதிர்பார்த்துக் காத்திருக்கும் வாக்கு வங்கியைப் பாதிக்கும் என்பது மட்டும் உறுதி.
கருத்துகள்