நாளை இங்கிலாந்து எலிசபெத்து மஹாராணியின் இறுதி ஊர்வலம் –
லண்டனில் இந்தியக் குடியரசுத் தலைவர் மற்றும் உலகத் தலைவர்கள் இராணி 2-ஆம் எலிசபெத்தின் மறைவு இங்கிலாந்து மட்டுமின்றி உலகம் முழுவதும் சோகம் ஏற்படுத்திய நிலையில். பொதுமக்களின் அஞ்சலிக்காக இராணி 2-ஆம் எலிசபெத்தின் உடல் லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளதனால்
பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து இராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துகின்றனர். பொதுமக்களின் வருகை அதிகரித்ததால் 24 மணி நேரம் வரை காத்திருந்து அஞ்சலி செலுத்த மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க, பல்வேறு ஊர்களில் இருந்து மக்கள் குவியத்தொடங்கினர்.
இதனால் 2,000-க்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனிடையே, இராணி 2ஆம் எலிசபெத்தின் உடலுக்கு அரசர் 3 ஆம் சார்லஸ் இளவரசர்கள் ஆண்ட்ரு, எட்வர்ட் மற்றும் இளவரசி அனே உடன் 15 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தினார்.
இறுதிச்சடங்கு நடைபெறும் திங்கட்கிழமை லண்டன் மற்றும் வின்சரில் விமானங்கள் பறக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 2,500 அடி உயரம் வரை ட்ரோன்கள் உட்பட அனைத்தும் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர், வெஸ்ட் மினிஸ்டர் மண்டபத்தில் இராணியின் இறுதிச்சடங்கு நிகழ்வுகளை மேற்கொள்வது குறித்த ஒத்திகை நிகழ்ச்சியும் நடைபெற்றதில் இராணியின் உடலை பாதுகாப்பாக எடுத்துச் செல்லும் வகையில் ஒத்திகை நிகழ்த்தப்பட்டது. திங்கட்கிழமை நடைபெறவுள்ள இராணி 2-ஆம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கில் உலக தலைவர்கள் உட்பட 2,000-க்கும் மேற்பட்ட முக்கிய நபர்கள் கலந்துகொள்வார்கள் என்றும் 7,00,000 அதிகமான பொதுமக்கள் பங்கேற்பார்களென்றும் எதிர்பார்க்க. இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்காக இந்தியக் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு லண்டன் சென்றுள்ளார்.
மேலும், பல்வேறு நாடுகளில் இருந்து முக்கிய தலைவர்கள் லண்டன் பயணம் மேற்கொண்டுள்ளனர்.ஸ்காட்லாந்திலுள்ள அரண்மனையில் இருந்து உயிரிழந்த இராணி எலிசபெத்தின் உடல் லண்டனுக்கு எடுத்து செல்லப்பட்ட நிலையிலும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டது இறுதிச்சடங்கு செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி அன்று வெஸ்ட்மின்ஸ்டரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இறுதிச் சடங்கில் காமென்வெல்த் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகள், ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் மற்றும் பிரிட்டனின் நட்பு நாடுகளின் தலைவர்கள் பலரும் பங்கேற்கிறார்கள் எனத் தெரிகிறது. இந்த நிகழ்வுக்காக பிரிட்டன் வரும் உலகத் தலைவர்கள், தனி விமானங்கள், தனி ஹெலிகாப்டர்கள், தனி கார்களில் வருவதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கருத்துகள்