கோவில் பூசாரியிடம் தட்டுக்காணிக்கையை வாரம் தோறும் ரூபாய். 21000 லஞ்சமாக கேட்டுப் பெற்ற உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலர் கைது
கோவில் பூசாரியிடம் வாரம்தோறும் ரூபாய். 21000 லஞ்சமாக கேட்ட நாமக்கல் இந்து சமய அறநிலையத்துறை யின் உதவி ஆணையாளர் ரமேஷ் மற்றும் நைனாமலை கோவில் செயல் அலுவலர் லட்சுமி காந்தன் ஆகியோர் கைது.
லஞ்சப் பணம் ரூபாய் 21,000 வாங்கும் போது ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவர்கள் இருவரையும் மறைந்திருந்து கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம், முத்துகாப்பட்டி அருகில் பிரபலமான பெரியசாமி கோவில் உள்ளது. இங்கு அமாவாசை, பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். ஞாயிற்றுக்கிழமை தோறும் திரளான பக்தர்கள் ஆடு, கோழி பலி கொடுத்து பூஜை செய்வது வழக்கம். இந்த கோவில், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த முத்துகாப்பட்டி பெரியசாமி கோவில் சித்திரை திருவிழாவின் மூன்றாம் வெள்ளியன்று சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதில் சுற்றுவட்டார கிராமங்களை ச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்கின்றனர்.
புகழ் பெற்ற கொல்லி மலையின் அடிவாரத்தில் உள்ள கோவில் முத்துகாபட்டி பெரிய சுவாமி கோவில். இந்த பகுதியின் புகழ் பெற்ற கோவிலாக விளங்கும் இது விவசாயிகளின் தெய்வமாகக் கருதப்படுகிறது.
இந்த கோவிலின் மூலவர் திறந்தவெளியிலுள்ள ஒரு ஆலமரத்தினடியில் அருள் வழங்கும் தெய்வம் ஞாயிற்றுக்கிழமைகளில் முத்துகாபட்டி பெரிய சுவாமி கோவிலில் நடக்கும் பிரார்த்தனைகளில் பல்வேறு பக்தர்கள் கலந்து கொண்டு இறைவனருள் பெறுவார்கள்.
நைனாமலை வரதராஜ பெருமாள் கோவில் செயல் அலுவலர் கூடுதலாக இக்கோவிலின் செயல் அலுவலராகப் பணிபுரிகிறார். இக்கோவிலில், புதுக்கோம்பையைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவரும் அவரது இரு சகோதரர்களும் பூஜைகளை செய்கின்றனர். பூசாரிகளுக்கு பூஜை செய்யும் முறையை தொடர்ந்து வழங்குவதற்காக, நாமக்கல் மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ரமேஷ், நைனாமலை கோவில் செயல் அலுவலர் லட்சுமிகாந்தன் ஆகியோர் பூசாரிகளிடம் வாரம்தோறும் அவர்களுக்கு வரும் தட்டுக்காணிக்கைகளில் இருந்து ரூபாய். 21,000 இதுவரை லஞ்சமாகப் பெற்று வந்துள்ளனர்.பூசாரி வேலை செய்து வரும் தங்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து லஞ்சம் கேட்கின்றனர் என்று ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் பொறுமை இழந்து போன இவர்கள் தொல்லை தாங்கமுடியாத பூசாரிகள் புகார் அளித்ததையடுத்து, ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அறிவுரையின் பேரில், ஏளூரில் உள்ள ஒரு வீட்டில் உதவி ஆணையர் ரமேஷ், செயல் அலுவலர் லட்சுமிகாந்தன் ஆகியோரிடம் பூசாரி அண்ணாதுரை ரூபாய். 21,000 ஐ லஞ்சமாக வழங்கிய போது, அங்கு மறைந்திருந்த மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் இராமச்சந்திரன், ஆய்வாளர் நல்லம்மாள் ஆகியோர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமேஷ் மற்றும் கோவில் செயல் அலுவலர் லட்சுமி காந்தன் ஆகிய இருவரையும் லஞ்சம் வாங்கிய கையுடன் பிடித்துக் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
கருத்துகள்