28 அடி உயரம் உடைய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் சிலையை பிரதமர் திறந்து வைக்கிறார்
புதுதில்லியில் இந்தியா கேட் அருகே நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சிலையை பிரதமர் திரு நரேந்திர மோடி (08.09.2022) திறந்து வைக்கிறார். 28 அடி உயரமுள்ள இந்த சிலை நேதாஜியின் முப்பரிமாண சிலை அமைந்துள்ள அதே இடத்தில் திறக்கப்பட உள்ளது.
மோனோலித்திக் கிரானைட் கற்களால் இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நேதாஜியின் வாழ்க்கை குறித்த ட்ரோன் காட்சி இந்தியா கேட் பகுதியில் 9, 10, 11 ஆம் தேதிகளில் செப்டம்பர் மாதம் 2022 அன்று இரவு எட்டு மணிக்கு இடம் பெற உள்ளது. இதனைப் பார்வையாளர்கள் இலவசமாக கண்டுகளிக்கலாம்.
கருத்துகள்