சிறுமி பாலியல் வன்கொடுமை போக்ஸோ வழக்கில், 8 பேருக்கு ஆயுள் தண்டனை காவல்துறை ஆய்வாளர் புகழேந்தி உள்ளிட்ட 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை
சென்னை வண்ணாரப்பேட்டை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட போக்ஸோ வழக்கில், 8 பேருக்கு ஆயுள் தண்டனை 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை
வழங்கி போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.
சென்னையில் வண்ணாரப்பேட்டை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட எண்ணூர் காவல்துறை ஆய்வாளர் புகழேந்தி, மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகர் உள்ளிட்ட 21 பேர்களும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டது. சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி இந்த தீர்ப்பு குறித்து முன்னர் அறிவித்தது. மேலும், இந்த வழக்கில் தீர்ப்பின் தண்டனை விவரங்களை பின்னர் அறிவிக்கப்படுமென்றும் 15 வயது சிறுமியை வண்ணாரப்பேட்டையில் பாலியல் தொழிலில் ஈடுபட வைத்து, வன்கொடுமைக்கு உள்ளாக்கிய சிறுமியின் உறுவினர் ஷகிதா பானு, மற்றும் உடந்தையாக இருந்த காவல்துறை ஆய்வாளர் புகழேந்தி,
தனியார் தொலைக்காட்சியில் பணி செய்யும் செய்தியாளர் வினோபாஜி, பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகர் ராஜேந்திரன், நாகராஜ், மாரீஸ்வரன், பொன்ராஜ், மாநகராட்சி ஒப்பந்த ஊழியரான அஜி(எ) வெங்கட்ராமன், ஸ்ரீபெரும்புதூர் கார்த்திக், திரிபுராவைச் சேர்ந்த தெபாசிஸ் நாமா உள்ளிட்ட 26 பேர் மீது போக்சோ தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த வண்ணாரப்பேட்டை காவல்துறையினர் 21 பேரையும் 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் தேதி கைது செய்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய ஒருவர் இறந்த நிலையில், இரண்டு பெண்கள் உள்பட நான்கு பேர் தலைமறைவாக இருக்கின்றனர். வழக்கின் விசாரணை, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திலுள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட 21 பேர் குற்றவாளிகள் என அறிவித்து தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில், தண்டனை விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்டது.
இன்று இந்த வழக்கின் தண்டனை விவரங்களை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலெட்சுமி அறிவித்துள்ளார். அதில், சிறுமியின் சித்தி, சித்தப்பா உள்பட உறவினர்கள் 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் காவல் ஆய்வாளர் புகழேந்தி, பாஜக பிரமுகர் ராஜேந்திரன், சிவில் சப்ளைஸ் அதிகாரி கண்ணன், அனிதா, காமேஷ்வர்ராவ், முகமது அசாருதீன், பசுலுதீன், வினோபாஜி, ராஜாசுந்தர் நாகராஜ், பொன்ராஜ், வெங்கட்ராம் ஆகியோருக்கு தலா 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிப்பதாக நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் வண்ணாரப்பேட்டை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தீர்ப்பு மற்றும் தண்டனை விவரங்களை வெளியிட்டது.
கருத்துகள்