தியாகி பகத் சிங் பிறந்த தினத்தையொட்டி அன்னாருக்கு பிரதமர் தலைவணங்கினார்
தியாகி பகத் சிங் பிறந்த தினத்தையொட்டி அன்னாருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைவணங்கினார். தியாகி பகத் சிங் குறித்து தமது எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ள வீடியோ பதிவையும் பிரதமர் பகிர்ந்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;
“தியாகி பகத் சிங் அவர்களின் பிறந்த தினத்தையொட்டி, அவருக்கு நான் தலைவணங்குகிறேன். அவருடைய துணிச்சல், நமக்கு அதிக உத்வேகத்தை அளிக்கிறது. நமது நாடு குறித்த அவரது தொலைநோக்குப் பார்வையை நனவாக்க, நாம் உறுதியேற்போம்.”
கருத்துகள்