முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மைசூரில் குடியரசுத் தலைவர்; மைசூரு தசரா பண்டிகையை தொடங்கிவைத்தார்

கர்நாடகாவில் குடியரசுத் தலைவர்;


மைசூரு தசரா பண்டிகையை தொடங்கிவைத்தார்

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு மைசூரு சாமுண்டி ஹில்சில் மைசூரு தசரா பண்டிகையை  இன்று (செப்டம்பர் 26, 2022) தொடங்கிவைத்தார்.  

இந்த நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர் மைசூரு தசரா பண்டிகை வாழ்த்துக்களை கர்நாடகா மக்களுக்கு  தெரிவித்தார். அனைவருக்கும் சாமுண்டீஸ்வரி கடவுளின் ஆசீர்வாதம் கிடைக்க தாம் பிரார்த்திப்பதாக கூறினார்.


நமது  நாட்டை முனிவர்கள் மற்றும் மக்கள் பண்டிகைகள் மூலம் பல நூற்றாண்டுகளாக இந்திய சமூகத்தை  ஒருங்கிணைத்துள்ளதாக  தெரிவித்தார்.


நாடு முழுவதும் ராமாயணம், மகாபாரதம், புராணங்கள், வரலாறு மற்றும் நாட்டுப்புறக் கதைகளில் இருந்து தெய்வீக மற்றும் மனித கதாபாத்திரங்களை அடிப்படையாகக் கொண்ட திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. இந்த விழாக்களில் பன்முகத்தன்மை மற்றும் ஒற்றுமை உள்ளது என்று அவர் கூறினார். மைசூரு தசரா இந்திய கலாச்சாரத்திற்கு பெருமை சேர்க்கும் விழாவாகவும் உள்ளது என்று தெரிவித்தார்.



கர்நாடகாவின் வளர்ச்சிப் பயணம் குறித்துப் பேசிய குடியரசுத் தலைவர், 2021-22 நிதியாண்டில், ஹார்டுவேர் மற்றும் மென்பொருள் துறையில் மொத்த அன்னிய நேரடி முதலீட்டில் 53 சதவீதத்தை கர்நாடகா ஈர்த்தது என்று குறிப்பிட்டார். இந்தியாவின் சிறந்த ஸ்டார்ட்-அப் மையமாக பெங்களூர் கருதப்படுவதாக கூறினார். நிதிக் ஆயோக் நீடித்த வளர்ச்சி, இலக்குகள் - இந்தியா குறியீட்டு எண் -2020-21 இன் படி, புதுமை கண்டுபிடிப்பு குறியீட்டில் நாட்டிலேயே  கர்நாடாக முதலிடத்தில் உள்ளது. தொடக்கக் கல்வியில் 100 சதவீத மாணவர் சேர்க்கை இலக்கை கர்நாடகா எட்டியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். பிரதமரின் கிராமிய சதக் யோஜனா' திட்டத்தின் கீழ் 100 சதவீத இணைப்பு இலக்கை எட்டியுள்ளது என்று கூறிய அவர், இதுபோன்ற பல சாதனைகள் மூலம் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த கர்நாடக அரசு மற்றும்  அம்மாநில மக்களை அவர் பாராட்டினார்.


 பின்னர், ஹூபாலியில் ஹூப்ளி-தர்வாட் நகராட்சி  ஏற்பாடு செய்த “பூர சன்மனா” என்ற பாராட்டு விழாவில் குடியரசுத் தலைவர் கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், நகரவாசிகள் அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். மேலும் அவரைப் பாராட்டியதன் மூலம், அவர்கள் இந்திய குடியரசுத் தலைவரை மட்டுமல்ல, இந்தியாவின் அனைத்து மகள்களையும் பாராட்டியதாகக் கூறினார்.


ஹூப்ளி-தார்வாட் இரட்டை நகரங்கள் கர்நாடகா மட்டுமின்றி இந்தியா முழுமைக்கும் புகழ்பெற்ற வரலாற்றின் ஒரு பகுதியாகும் என்றும், இந்தியாவின் கலாச்சார வரைபடத்தில் அவை இருப்பது குறிப்பிடத்தக்கது என்றும் குடியரசுத் தலைவர் கூறினார். கர்நாடகாவின் வடக்கு பகுதியில் மருத்துவம், பொறியியல், சட்டம், அறிவியல், கலை மற்றும் தொழில்நுட்பம் ஆகிய பல பிரபலமான கல்வி மையங்கள் உள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.


அதனைத் தொடர்ந்து தார்வாட்டில் உள்ள தார்வாட் இந்திய தகவல் தொழில்நுட்பக் கழகத்தின் புதிய வளாகத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைத்தார்.

இக்கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர், தார்வாட் இந்திய தொழில்நுட்பக் கழகம் கல்வி வாயிலாக நமது நாட்டின் எதிர்காலத்தை தயார் செய்து நமக்கு பெருமை அளிப்பதாக குறிப்பிட்டார். இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிலையம் என்று குறிப்பிட்டார்.



இந்த முயற்சிகளுக்காக மத்திய அரசு, கர்நாடக அரசு மற்றும் சம்பந்தப்பட்ட துறையினரை பாராட்டுவதாக கூறினார்.

நவராத்திரியை முன்னிட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு பிரதமர் திரு.நரேந்திர மோடி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். நவராத்திரியின் தொடக்கத்தில் திரு.மோடி ஷைலபுத்ரி தேவியிடம் பிரார்த்தனை செய்தார். மேலும், அனைவருக்கும் மகிழ்ச்சி, ஆரோக்கியம், தெய்வத்தின் அருள் கிடைக்க வேண்டும் என வாழ்த்து தெரிவித்தார்.

அவர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது,

“சக்தி வழிபாட்டின் சிறந்த திருவிழாவான நவராத்திரியில் உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள். நம்பிக்கையின் மங்கலகரமான இந்த நாளில், உங்கள் ஒவ்வொருவரின் வாழ்விலும் புதிய ஆற்றலும், உற்சாகமும் உண்டாகட்டும். ஜெய் மாதா”

நவராத்திரி விழா இன்று முதல் ஷைலபுத்ரி தேவி வழிபாட்டுடன் தொடங்குகிறது. அவரது அருளால் அனைவரது வாழ்வும் மகிழ்ச்சி, நல்ல அதிர்ஷ்டம், சிறந்த ஆரோக்கியம் நிறைந்ததாக இருக்க வேண்டுகிறேன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...