பா.ஜ.க. நடிகை சோனாலி போகத் மர்ம வழக்கை, சி.பி.ஐ. விசாரிக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்திருக்கிறது.
ஹரியானா நடிகை சோனாலி போகத். 43 வயதானவர், பா.ஜ.க.வின் முக்கியமான பிரமுகரான இவர் . ஆகஸ்ட் மாதம் 22-ஆம் தேதி கோவா வந்து விடுதியில் தங்கியிருந்த போது, மர்மமாக உயிரிழந்தார்.
காவலதுறை விசாரணையில், சோனாலியின் உதவியாளர்கள் குளிர்பானத்தில் எதையோ கலந்து குடிக்கக் கொடுத்தது தெரியவந்ததைத் தொடர்ந்து,
சோனாலியின் உதவியாளர்கள் இரண்டு பேர், விடுதி உரிமையாளர், மற்றும் போதைப் பொருள் கடத்தல்காரர் உட்பட ஐந்து நபர்கள் கைது செய்யப்பட்டனர். எனினும், இந்த வழக்கில் பல மர்மங்கள் உள்ளதால்,
சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது வேண்டும் என சோனாலியின் உறவினர்கள் கோரிக்கை விடுத்த நிலையில் ஹரியானா முதல்வரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான மனோகர் லால் கட்டாரும் இதில் சி.பி.ஐ. விசாரணை கோரி இருந்தார். அதன் காரணமாக கோவா முதல்வரும், பா.ஜ.க வைச் சேர்ந்த பிரமோத் சாவந்த் இந்த வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கும்படி, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பினார். அதுகுறித்து பிரமோத் சாவந்த் கூறுகையில்,
“சோனாலி மரண வழக்கில், கோவா யூனியன் பிரதேச காவல்துறை திறமையாக விசாரணை நடத்தி சில உண்மைகளைக் கண்டுபிடித்திரக்கிறார்கள். ஆனாலும், சோனாலி குடும்பத்தினர் சி.பி.ஐ. விசாரணைக்கு வற்புறுத்துவதால், இந்த வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பி இருக்கிறோம்” என்றார். இதைத் தொடர்ந்து,
சோனாலி மரண வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க பரிந்துரைப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தற்போது அறிவித்துள்ளது.
கருத்துகள்