கிராமத்திலுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட கிணறுகளின் நீர்மட்டத்தை கண்டுபிடிக்க, நாடு முழுவதும் பயன்படுத்துவதற்காக ஊரக வளர்ச்சி அமைச்சகம், “ஜல்தூத் செயலி”யை உருவாக்கியுள்ளது
கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம், “ஜல்தூத் செயலி”யை உருவாக்கியுள்ளது. இது கிராமத்திலுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட கிணறுகளின் நீர்மட்டத்தை கண்டுபிடிக்க நாடு முழுவதும் பயன்படுத்தப்படும். இதனை மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் திரு.கிரிராஜ் சிங், புதுதில்லியில் நாளை நடைபெறும் விழாவில், “ஜல்தூத் செயலி”யை அறிமுகம் செய்து வைக்கவுள்ளார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட கிணறுகளின் நீர் மட்டத்தை ஆண்டுக்கு இருமுறை (பருவமழைக்கு முந்தைய மற்றும் பிந்தைய) காலங்களில் அளவிடுவதற்கான வேலைவாய்ப்புக்கு ஜல்தூத் செயலி உதவும். ஒவ்வொரு கிராமத்திலும் போதிய இடங்கள் (2-3) தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இவை அந்த கிராமத்தின் நிலத்தடி நீர் மட்டத்தை அறிய உதவும்.
இந்த செயலியானது, சரியான தரவுகளுடன் பஞ்சாயத்துகளின் பணிகளை எளிதாக்குவதற்கு பயன்படுத்தப்படும். நிலத்தடி நீர் தரவுகள், கிராம பஞ்சா
யத்து வளர்ச்சித் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டங்களின் ஒருபகுதியாக செயல்படுத்தப்படும்.
நீர்நிலைகளை மேம்படுத்தல் மற்றும் புதுப்பித்தல், காடுகள் வளர்ப்பு, மழைநீர் சேகரிப்பு போன்ற திட்டங்களின் மூலம், கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் நீர் மேலாண்மையை செயல்படுத்துவதற்கு அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
கருத்துகள்