மத்திய ஜல் சக்தி மற்றும் பழங்குடியினர் நலத்துறை இணை அமைச்சர் புதுதில்லியில் தூய்மை நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
மத்திய ஜல் சக்தி மற்றும் பழங்குடியினர் நலத்துறை இணை அமைச்சர் திரு பிஷ்வேஸ்வர் துடு இன்று புதுதில்லியில் தூய்மை நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
மத்திய ஜல் சக்தி மற்றும் பழங்குடியினர் விவகாரங்களுக்கான இணை அமைச்சர் திரு பிஷ்வேஸ்வர் துடு தலைமையில் இன்று புதுதில்லி தியாகராஜ் நகரில் உள்ள ஸ்ரீ ஜகன்னாதர் கோயில் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தூய்மை மற்றும் பொது விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் 72வது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில், "இருவார சேவை" என்ற தேசிய திட்டத்தின் கீழ் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. "இருவார சேவை" கொண்டாட்டம் பிரதமரின் பிறந்த நாளான செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2 வரை நடைபெறுகிறது.
சுற்றுச்சூழல் தூய்மை, நீர் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு, ரத்த தானம் போன்றவற்றைப் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது இந்த திட்டம்.
கருத்துகள்