கொவிட் குறித்த சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அன்மைத் தகவல்
இந்தியாவில் செலுத்தப்பட்ட மொத்த கோவிட்-19 தடுப்பூசி எண்ணிக்கை 216.56 கோடியைக் கடந்தது
இந்தியாவில் கொவிட்-19 தடுப்பூசியை பொறுத்தவரை இன்று காலை 7 மணி நிலவரப்படி 216.56 கோடிக்கும் அதிகமான (2,16,56,54,766) டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன
12-14 வயதிற்குட்பட்டோருக்கான கொவிட்-19 தடுப்பூசி, 16 மார்ச் 2022 முதல் செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை, ஏறத்தாழ 4.07 கோடிக்கும் அதிகமான (4,08,08,126) இளம் பருவத்தினருக்கு கொவிட்-19 தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. 18-59 வயதுடையவர்களுக்கு கொவிட்-19 முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தும் பணி 10 ஏப்ரல் 2022 அன்று தொடங்கியது..
இந்தியாவில் தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 47,922 மிகக் குறைவாக உள்ளது. நாட்டின் மொத்த நோய் தொற்று உள்ளவர்கள் தற்போது 0.11 சதவீதமாக உள்ளனர்.இதை தொடர்ந்து இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.71 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 4,555 பேர் குணமடைந்துள்ளனர். பெருந்தொற்றின் தொடக்கத்திலிருந்து இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,39,57,929.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,664 புதிய நோயாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 2,89,228 கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதுவரை மேற்கொள்ளப்பட்ட மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 89.15 கோடி (89,15,77,185) வாராந்திரத் தொற்று 1.79 சதவீதமாக உள்ளது. தினசரித் தொற்று விகிதம் 1.96 சதவீதமாக பதிவாகியுள்ளது.203.03 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன
நாடு முழுவதும் கொவிட்- 19 தடுப்பூசி செலுத்துவதை விரைவுபடுத்தவும் விரிவுபடுத்தவும் மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. நாடு முழுவதும் கொவிட்- 19 தடுப்பூசி இயக்கம் 2021 ஜனவரி 16 அன்று தொடங்கியது. அனைவருக்கும் கொவிட்- 19 தடுப்பூசி என்ற புதிய கட்டம் 2021 ஜூன் 21 அன்று தொடங்கியது. கூடுதலான தடுப்பூசிகள் இருப்பு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சிறப்பாக திட்டமிடுவதற்கு வசதியாக அவற்றால் நன்கு அறியப்படும் வகையில் தடுப்பூசி இருப்பு அறிதல்,
வழங்கல் தொடரை முறைப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் தடுப்பூசி இயக்கம் கொண்டு விரைவுபடுத்தப்பட்டது.
நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் ஒரு பகுதியாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் மத்திய அரசு அவற்றுக்கு கொவிட்- 19 தடுப்பூசிகளை இலவசமாக வழங்கியது. அனைவருக்கும் கொவிட்- 19 தடுப்பூசி இயக்கம் என்ற புதிய கட்டத்திற்கு உற்பத்தியாளர்களிடம் இருந்து மத்திய அரசு தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் 75% இலவசமாக வழங்கும்.
இதுவரை, 2022 செப்டம்பர் 18 நிலவரப்படி, மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் 203.03 கோடிக்கும் அதிகமான (2,03,03,52,325) கொவிட் தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதில் 3. 70 கோடிக்கும் அதிகமான (3,70,12,740) கொவிட் தடுப்பூசி டோஸ்கள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மீதமாகவும் பயன்படுத்தப்படாமலும் உள்ளன.கொவிட் அண்மைச் செய்திகள்
தேசிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இந்தியாவில் இதுவரை 216.56 கோடி (94.65 கோடி 2-வது தவணை மற்றும் 19.48 கோடி முன்னெச்சரிக்கை தவணை) தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் 14,84,216 டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.
இந்தியாவில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 47,922 கொவிட் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 0.11 சதவீதமாக உள்ளது.
குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.71 சதவீதம்
கடந்த 24 மணி நேரத்தில் 4,555 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,39,57,929 என அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 5,664 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.
தினசரி பாதிப்பு விகிதம் (1.96) சதவீதம் ஆகும்
வாராந்திர பாதிப்பு விகிதம் (1.79) சதவீதம் ஆகும்
இதுவரை மொத்தம் 89.15 கோடி கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 2,89,228 கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
கருத்துகள்