முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திராவிட முன்னேற்றக் கழகத்தில் நடந்த தேர்தலில் போட்டியில்லாமல் தேர்வான மாவட்டச் செயலாளர்கள்

தமிழகத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் 15 வது உட்கட்சித் தேர்தல்


பல்வேறு கட்டங்களாக ஜனநாயக முறையில் நடைபெற்றது.




மாவட்ட செயலாளர், அவைத்தலைவர், 3 துணைச்செயலாளர்கள், பொருளாளர், செயற்குழு, மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கான வேட்பு மனுத் தாக்கல் செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி துவங்கி 25 ஆம் தேதி வரை நடைபெற்றது. சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில் வேட்புமனுத் தாக்கல் நடைபெற்று முடிந்து.





அக் கட்சியின் சார்பில் நிர்வாக வசதிக்காகப் பிரிக்கப்பட்டுள்ள 72  மாவட்டங்களுக்கும் வேட்பு மனுக்கள் பெறப்பட்ட நிலையில் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதிக்குள் மாவட்டச் செயலாளர் தேர்தல் முடிவுகள் வெளியாகும்போது என்ற நிலையில்  திமுக சார்பில் 15வது பொதுத்தேர்தல் தொடர்பான பட்டியல் வெளியானது. அதன்படி திமுகவின் பேரூர், ஒன்றிய, நகர, பகுதி, மாநகர மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட செயலாளர்கள், தலைமைச் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, மாவட்ட நிர்வாகிகளின் பட்டியலை கட்சியின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.






அதன்படி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை முடிந்த நிலையில், 64 திமுக மாவட்ட செயலாளர்கள் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். திமுகவின் 72 மாவட்டச் செயலாளர்களில் 7 மாவட்ட செயலாளர்கள் புதிதாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதன் படி கன்னியாகுமரி மேற்கு  அமைச்சர் மனோ தங்கராசும், கன்னியாகுமரி கிழக்கு ரெ மகேஷும் , தூத்துக்குடி தெற்கு  அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி வடக்கு  அமைச்சர் கீதாஜீவன், தென்காசி மேற்கு  சிவபத்மநாதன்,






திருநெல்வேலி மத்தியில்  அப்துல் வஹாப், திருநெல்வேலி கிழக்கு  ஆவுடையப்பன், விருதுநகர் தெற்கு  அமைச்சர் கேகே எஸஅஎஸஅஆர் ராமச்சந்திரன், விருதுநகர் வடக்கு  அமைச்சர் தங்கம் தென்னரசு. சிவகங்கை அமைச்சர் கேஆர் பெரியகருப்பன்,

இராமநாதபுரம்  காதர்பாட்சா முத்துராமலிங்கம், தேனி தெற்கு  இராமகிருஷ்ணன், தேனி வடக்கு தங்க தமிழ்செல்வன், திண்டுக்கல் மேற்கு அமைச்சர் சக்கரபாணி, திண்டுக்கல் கிழக்கு  செந்தில்குமார், மதுரை மாநகர் கோ தளபதி, மதுரை தெற்கு   மு மணிமாறன், மதுரை வடக்கு அமைச்சர் மூர்த்தி.   சென்னை தெற்கு  அமைச்சர் மா சுப்பிரமணியன், சென்னை தென்மேற்கு  மயிலை த வேலு, சென்னை மேற்கு நே. சிற்றரசு, சென்னை கிழக்கு  அமைச்சர் பி.கே சேகர்பாபு, சென்னை வடகிழக்கு மாதவரம் எஸ் சுதர்சனம், சென்னை வடக்கு  தா. இளங்கோ என்ற இளைய அருணா, விழுப்புரம் மத்தியில் நா புகழேந்தி, விழுப்புரம் வடக்கு மாவட்ட அமைச்சர் செஞ்சி கேஎஸ் மஸ்தான்,

திருவண்ணாமலை தெற்கு  அமைச்சர் எ.வ. வேலு, திருவண்ணாமலை வடக்கு எம்.எஸ்.தரணி வேந்தன், வேலூர் மேற்கு (திருப்பத்தூர்)  தேவராஜி, வேலூர் மத்தியில்  நந்தகுமார், வேலூர் கிழக்கு (ராணிப்பேட்டை) ஆர் காந்தி, காஞ்சிபுரம் தெற்கு  சுந்தர், காஞ்சிபுரம் வடக்கு அமைச்சர் தாமோ அன்பரசன், திருவள்ளூர் மேற்கு எஸ் சந்திரன், திருவள்ளூர் மத்திய அமைச்சர் சா மு நாசர், திருவள்ளூர் கிழக்கு டிஜே கோவிந்தராஜன், நாமக்கல் மேற்கு மதுரை செந்தில், நாமக்கல் கிழக்கு  கே.ஆர்.என். ராஜேஷ்குமார், சேலம் மத்தியில் ராஜேந்திரன், சேலம் மேற்கு டி.எம். செல்வகணபதி, சேலம் கிழக்கு  எஸ்ஆர் சிவலிங்கம், புதுக்கோட்டை தெற்கு  அமைச்சர் ரகுபதி, புதுக்கோட்டை வடக்கு செல்வபாண்டியன், கரூர் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி, அரியலூர் அமைச்சர் சா.சி சிவசங்கர், பெரம்பலூர்  சி ராஜேந்திரன், .

திருச்சிராப்பள்ளி மத்தியில்  வைரமணி, திருச்சிராப்பள்ளி தெற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சிராப்பள்ளி வடக்கு தியாகராஜன், திருவாரூர் கலைவாணன், நாகபட்டினம் தெற்கு  கௌதமன், நாகபட்டினம் வடக்கு  நிவேதா எம் முருகன், தஞ்சாவூர் தெற்கு அண்ணாதுரை, தஞ்சாவூர் மத்தியில் துரை சந்திரசேகரன், தஞ்சாவூர் வடக்கு கல்யாண சுந்தரம், கடலூர் மேற்கு கணேசன், கடலூர் கிழக்கு  அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம்,



கள்ளக்குறிச்சி தெற்கு வசந்தம் கார்த்திகேயன், கள்ளக்குறிச்சி வடக்கு தா உதயசூரியன் , நீலகிரி முபாரக், ஈரோடு தெற்கு  சு.முத்துசாமி, ஈரோடு என். நல்லசிவம், திருப்பூர் தெற்கு பத்மநாபன், திருப்பூர் வடக்கு செல்வராஜ், கோயமுத்தூர் மாநகர்  நா கார்த்திக், கோயமுத்தூர் தெற்கு தளபதி முருகேசன்,

கோயமுத்தூர் வடக்கு தொ.அ. ரவி, கிருஷ்ணகிரி மேற்கு ஒய் பிரகாஷ், கிருஷ்ணகிரி கிழக்கு மதியழகன், தருமபுரி மேற்கு பெ.பழனியப்பன், தருமபுரி கிழக்கு தடங்கம் பெ சுப்பிரமணி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளதில் நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளராக இருந்த மூர்த்திக்குப் பதிலாக செந்தில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளரான செங்குட்டுவனுக்குப் பதிலாக பர்கூர் மதியழகன், கோயமுத்தூர் தெற்கு மாவட்டச் செயலாளர் வரதராஜனுக்குப் பதிலாக தளபதி முருகேசனும்,. கோயமுத்தூர் வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த ராமச்சந்திரனுக்குப் பதில் ரவி, திருவள்ளூர் மேற்கு மாவட்டச் செயலாளரான பூபதிக்குப் பதிலாக சந்திரன், தருமபுரி மேற்கு மாவட்டச் செயலாளரான இன்பசேகரனுக்கு பதிலாக  பழனியப்பன், தஞ்சாவூர் தெற்கு மாவட்டச் செயலாளரான ஏனாதி பாலசுப்பிரமணியத்திற்குப் பதிலாக

அண்ணாதுரை ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.தேர்தல் நடத்தாமலேயே திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் குமாரை தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளராக தேர்வு செய்ய முயற்சிப்பதாக குற்றம்சாட்டி தென்காசி வடக்கு மாவட்டத்தின் தற்போதைய பொறுப்பாளர் செல்லதுரையின் ஆதரவாளர்கள் அண்ணா அறிவாலயம் முன்பு தரையிலமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட நிலையில் குழப்பம் உள்ளது. இதனால் இந்த மாவட்டத்துக்கு மட்டும் மாவட்ட செயலாளர் தேர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் திமுகவின் புதிய அமைப்புச் செயலாளராக அன்பகம் கலை நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் அமைப்பு செயலாளராக இருந்த ஆர்எஸ் பாரதி, திமுக செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...