‘ஹெம்கோஷ்’ என்ற அசாமிய அகராதியின் பிரெய்ல் பதிப்பின் பிரதியை பிரதமர் பெற்றுக் கொண்டார்
‘ஹெம்கோஷ்’ என்ற அசாமிய அகராதியின் பிரெய்ல் பதிப்பின் பிரதியை திரு ஜெயந்தா பருவாவிடம் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி பெற்றுக் கொண்டுள்ளார். ஹெம்கோஷ் என்பது 19-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான அசாமிய அகராதிகளுள் ஒன்றாகும். பிரெய்ல் பதிப்பை வெளியிடுவதற்கு திரு ஜெயந்தா பருவாவும் அவரது குழுவினரும் மேற்கொண்ட முயற்சிகளை திரு மோடி பாராட்டினார்.
ட்விட்டர் பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது:
“19-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான அசாமிய அகராதிகளுள் ஒன்றான ஹெம்கோஷின் பிரெய்ல் பதிப்பின் பிரதியைப் பெற்றுக் கொண்டது, மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. பிரெய்ல் பதிப்பை வெளியிடுவதற்கு திரு ஜெயந்தா பருவாவும் அவரது குழுவினரும் எடுத்துக் கொண்ட முயற்சிகளைப் பாராட்டுகிறேன்
கருத்துகள்