முன்னாள் சபாநாயகர் சேடபட்டி முத்தையா உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.
அவருக்கு வயது 76. கடந்த சில மாதங்களாகவே மதுரையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலமானதாக அறிவிக்கப்பட்டது.
1945 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி டி.குண்ணத்தூர் அருகில் உள்ள முத்தப்பன்பட்டியில் பிறந்தார் முத்தையா.
சேடபட்டி சட்டசபைத் தொகுதியில் இருந்து நான்கு முறை தேர்வு செய்யப்பட்டார் .எம்ஜிஆரின் நம்பிக்கை பெற்றிருந்தவர் சேடபட்டி முத்தையா. எம்ஜிஆர் மறைவிற்குப் பின் 1991 ஆம் ஆண்டு செவ்வி ஜெ. ஜெயலலிதா முதலாவது முறையாக முதல்வரான போது சபாநாயகராக பதவி வகித்தவர் சேடப்பட்டி முத்தையா. அதிமுகவின் பொருளாளராகவும் சிலகாலமிருந்தார். எம்.ஜி.ஆர். காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். சேடப்பட்டி முத்தையாவின் இல்லத் திருமண விழாவில் ஜெ.ஜெயலலிதா பேசிய போது, 'விசுவாசத்திற்கு மறுபெயர் சேடப்பட்டி முத்தையா என்று பாராட்டியுள்ளார். ஆனால் வாஜ்பாய் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயலலிதாவின் நம்பிக்கை இழந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையாவை கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை வந்த தமிழகத்தின் முதல்வர் மு.க ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். சேடப்பட்டி முத்தையாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். வாஜ்பாய் ஆட்சி காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தார். காலப்போக்கில் இவர் அதிமுகவில் ஓரம் கட்டப்பட்டதையடுத்து விலகி 2006 ஆம் ஆண்டில் திமுகவில் இணைந்தார். மதுரை திருமங்கலத்தில் வசித்த சேடபட்டி முத்தையாவிற்கு சில வாரங்களாகவே உடல் குறைவு ஏற்பட்டதன் காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சேடபட்டி முத்தையா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு மனைவி சகுந்தலா மற்றும் இரண்டு மகன்களும் உண்டு. சேடபட்டி முத்தையா மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவிக்கின்றனர்.திமுக மதுரை புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளராக. சேடபட்டி இரா. முத்தையாவின் மகன் மணிமாறன் உள்ளார்
கருத்துகள்