ஓணம் பண்டிகையையொட்டி குடியரசுத் தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
ஓணம் பண்டிகையையொட்டி அனைத்து குடிமக்களுக்கும் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
“புனிதமான ஓணம் பண்டிகை நாளன்று இந்தியாவில் வாழும் அனைத்து குடிமக்களுக்கும், வெளிநாட்டில் உள்ளவர்களுக்கும் குறிப்பாக கேரளாவின் சகோதர, சகோதரிகளுக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்களை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.
பயிர்கள் அறுவடையை குறிப்பதாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை நமது விவசாயிகளின் கடின உழைப்புக்கு மரியாதை செலுத்துவதோடு, இயற்கை அன்னைக்கு நன்றி தெரிவிப்பதாகவும் விளங்குகிறது.
கேரள மக்கள் அவர்களின் வளமான, கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாத்து வருகின்றனர். பரஸ்பர ஒத்துழைப்பையும், நல்லிணக்கத்தையும் மேம்படுத்த இந்த விழா அவர்களுக்கு ஒரு வாய்ப்பாகவும் அமைந்துள்ளது.
இந்நாளில் ஒன்றுபட்டு உழைக்கவும், வளமான புகழ்மிக்க நாடாக இந்தியாவை மாற்றுவதற்கு பங்களிப்பு செய்யவும் நாம் உறுதியேற்போம்” என்று குடியரசுத் தலைவர் வெளியிட்ட செய்தியில் கூறியுள்ளார். மேலும்ஓணம் பண்டிகையை முன்னிட்டு, குடியரசு துணைத் தலைவர் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்ஓணம் பண்டிகையை முன்னிட்டு குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர், நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியின் முழு விவரம் வருமான் முழு விவரம் வருமாறு:-
“புனிதமான ஓணம் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு எனது இனிய நல்வாழ்த்துக்களை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
மன்னர் மஹாபலியின் நினைவை போற்றும் வகையில் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை நேர்மை, கருணை, தியாகம் ஆகிய உயர்ந்த மாண்புகளின் அடையாளமாகும். வயல்வெளிகளில் புதிய பயிர்கள் வடிவில் இயற்கை அன்னையின் அருளை கொண்டாடுவதாகவும் இந்த நிகழ்வு விளங்குகிறது.
ஓணம் பண்டிகை அனைவரது வாழ்விலும், அமைதி, செழிப்பு மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டு வரட்டும்”.ஓணம் பண்டிகையையொட்டி மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
ஓணம் பண்டிகையையொட்டி ஒவ்வொருவருக்கும் குறிப்பாக உலகம் முழுவதும் உள்ள மலையாள சமுதாய மக்களுக்கும், கேரள மாநில மக்களுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஓணம் பண்டிகையையொட்டி மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
ஓணம் பண்டிகையையொட்டி ஒவ்வொருவருக்கும் குறிப்பாக உலகம் முழுவதும் உள்ள மலையாள சமுதாய மக்களுக்கும், கேரள மாநில மக்களுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“அனைவருக்கும், குறிப்பாக மலையாள மாநில மக்கள் மற்றும் உலகம் முழுவதும் பரவியுள்ள மலையாள மொழி பேசும் மக்களுக்கு ஓணம் வாழ்த்துக்கள். இந்த பண்டிகை, இயற்கை அன்னையின் முக்கிய பங்கு, கடின உழைப்பாளிகளான நமது விவசாயிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. நமது சமுதாயத்தில் நல்லிணக்க உணர்வை ஓணம் மேலும் வலுப்படுத்தட்டும்.”
பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“அனைவருக்கும், குறிப்பாக மலையாள மாநில மக்கள் மற்றும் உலகம் முழுவதும் பரவியுள்ள மலையாள மொழி பேசும் மக்களுக்கு ஓணம் வாழ்த்துக்கள். இந்த பண்டிகை, இயற்கை அன்னையின் முக்கிய பங்கு, கடின உழைப்பாளிகளான நமது விவசாயிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. நமது சமுதாயத்தில் நல்லிணக்க உணர்வை ஓணம் மேலும் வலுப்படுத்தட்டும்.”
கருத்துகள்