அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளர் தேர்வு செல்லாது உச்சநீதிமன்றத்தில் வழக்கு முடிவுக்கு வரும் வரை இடைக்காலத் தடை விதிப்பு
அதிமுகவில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி தரப்பில் நடந்த ஜூலை மாதம் 11 ஆம் தேதி
பொதுக்குழுவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜெயச்சந்திரன், ஜூலை மாதம் 11 ஆம் தேதி நடந்த பொதுக்குழு செல்லாதெனத் தீர்ப்பளித்தார். முந்தைய பொதுக்குழு நடைபெற்ற ஜூன் மாதம் 23-ஆம் தேதியன்று அதிமுகவிலிருந்த நிலைமை தொடர்ந்து நீடிக்க வேண்டுமென நீதிபதி ஜெயச்சந்திரன் வழங்கிய தீர்ப்புக்கெதிராக எடப்பாடி கே.பழனிசாமி மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்து அது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அடங்கிய அமர்வில் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள், எடப்பாடி கே. பழனிச்சாமி தரப்பு கூட்டிய ஜூலை மாதம் 11-ஆம் தேதி கூட்டிய அதிமுக பொதுக்குழுக் கூட்டம் செல்லுமெனத் தீர்ப்பளித்தனர். அதனால் அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி தேர்வு செய்யபப்ட்டதும் செல்லும் என்ற நிலை வந்தது.சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்து நீதிபதிகள் எம்.ஆர். ஷா, கிருஷ்ணமுராரி ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்த விசாரணையில் எடப்பாடி கே. பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ரஞ்சித்குமார் ஆகியோர் ஆஜராகினர்.
விசாரணையின் முடிவில், மேல்முறையீட்டு வழக்கு விசாரணை நடைபெறும் போது பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த வேண்டும் என எடப்பாடி கே.பழனிசாமி தரப்பில் ஏன் அவசரம் காட்டுகிறதென நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதனைத் தொடர்ந்து அதிமுகவின் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிரடியாக வழக்கு முடிவுக்கு வரும் வரை இடைக்காலத் தடை விதித்தனர். அத்துடன் இவ்வழக்கில் எடப்பாடி கே.பழனிசாமி தரப்பில் பதிலளிக்கவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர். உச்சநீதிமன்றத்தின் உத்தரவு எடப்பாடி கே.பழனிசாமி தரப்புக்கு பெரும் பின்னடைவாகும். ஆனால் அதிமுகவின் பொதுச்செயலாளர் தேர்தலை அடுத்த மூன்று மாதங்களுக்குள் நடத்தி அந்தப் பதவியில் அமர வேண்டுமென்பது எடப்பாடி கே.பழனிசாமி தரப்பின் வியூகமாகும். தற்போது உச்சநீதிமன்றத்தின் இடைக்காலத் தடையால் இந்த முயற்சிக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது .அதிமுக உட்கட்சியில் நான்கு பிரிவாக உடைந்து இந்த மோதலுக்கிடையில் எடப்பாடி கே. பழனிசாமி சில நாட்களுக்கு முன் டெல்லி சென்றார்.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த சில வாரங்களுக்கு முன் சென்னை வந்த போது அவரைச் சந்திக்க எடப்பாடி கே.பழனிசாமி தீவிரமாக முயன்ற நிலையில் அனுமதி கொடுக்கவில்லை. கூட்டத்தோடு கூட்டமாக விமான நிலையத்தில் மட்டுமே எடப்பாடி கே.பழனிசாமியை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். அதற்கு முன் எடப்பாடி கே.பழனிசாமி டெல்லிக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். ஆனால் அந்தப் பயணத்திலும் எடப்பாடி கே.பழனிசாமியால் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க முடியவில்லை.இப்படி இரண்டு முறை எடப்பாடியை தனியாக மோடி சந்திக்க முயன்ற நிலையில்தான் அவருக்கு டெல்லியில் அப்போது அழைப்பு விடுக்கப்பட்டது, டெல்லி சென்ற எடப்பாடி கே. பழனிச்சாமி உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் 20 நிமிடம் சந்தித்துப் பேசினார். டெல்லி சென்ற எடப்பாடி கே.பழனிசாமி கையில் தன்மீதான ஊழல் வழக்குகளை மறந்து பெரிய 'ரெட்' லிஸ்ட் ஒன்றுடன் சென்றுள்ளதாக கூறப்பட்டது.
அதாவது ஆக்சன் எடுக்கப்பட வேண்டியவர்களுக்கான லிஸ்ட் என்கிறார்கள். திமுகவில் உள்ளவர்கள் மீது இருக்கும் புகார்கள். அவர்கள் எடுத்த டெண்டர் குறித்த விவரங்கள் அடங்கிய லிஸ்டுடன் எடப்பாடி கே.பழனிச்சாமி டெல்லிக்கு சென்றதாக கூறப்படுகிறது. திமுகவில் இவர்கள் எல்லாம் தவறு செய்துள்ளனர். இவர்கள் மீது ஆக்சன் எடுங்கள் என்று எடப்பாடி கே.பழனிச்சாமி கோரிக்கை விடுத்தாராம். அதோடு சிபிஐ, அமலாக்கத்துறையை அனுப்பி வையுங்கள் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். இதற்காக திமுக புள்ளிகள் அடங்கிய லிஸ்டைதான் அவர் கொடுத்துள்ளார்.இந்த நிலையில் தான் தமிழ்நாடு ஆளுநர் ரவியும் 26-ந்தேதி டெல்லிக்கு அழைக்கப்பட்டிருக்கிறார் என்று தகவல் பரவியது 5 நாள் பயணமாக அவரது டெல்லி ப்ரோக்கிராம் அமைய உள்ளது.
கருத்துகள்