காரைக்குடியில் புதிதாக தொடங்கப் பட்டுள்ள அரசு சட்டக் கல்லூரியில்
நடப்பாண்டில் மாணவர் சேர்க்கை தொடங்கும் என தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சமீபத்தில் தெரிவித்த நிலையில். டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற அனைத்து அரசு சட்டக் கல்லூரிகளிலும், இந்த கல்வி ஆண்டில், ஒருங்கிணைந்த 5 ஆண்டு சட்ட படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவுகள் தொடங்கியது. சென்னை, தரமணியில் உள்ள பல்கலை கழக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஆன்லைன் விண்ணப்ப பதிவையும் சமீபத்தில் தொடங்கி வைத்ததில் உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன், துணைவேந்தர் சந்தோஷ் குமார், சட்டப் படிப்புகளுக்கான இயக்குனர் விஜய லட்சுமி ஆகியோர் கலந்துகொண்டனர்.
காரைக்குடி சட்டக் கல்லூரியில் நடப்பாண்டில் ஒருங்கிணைந்த 5 ஆண்டு படிப்பு மற்றும் 3ஆண்டு படிப்புகளுக்கான சேர்க்கை நடக்கும். தமிழகத்தில் கூடுதலாக சட்டக்கல்லூரிகளை உருவாக்க கூடுதலாக நிதி தேவைப்படுகிறது. இருந்தாலும், காரைக்குடியில் மாணவர் சேர்க்கை தொடங்கும். சட்டக்கல்லூரி இல்லாத மாவட்டங்களில் கல்லூரிகளைத் தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்.
மேலும் சென்னை, மதுரை, திருச்சிராப்பள்ளி, கோயமுத்தூர், திருநெல்வேலி, செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரம், தர்மபுரி, இராமநாதபுரம், சேலம், நாமக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் அமைந்திருக்கும் 14 அரசு சட்டக்கல்லூரிகள் மற்றும் திண்டிவனத்தில் உள்ள தனியார் சட்டக் கல்லூரியிலுள்ள இடங்களில் சேர்வதற்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக பெருங்குடி வளாக சீர்மிகு சட்டப்பள்ளியில் 624 இடங்களுக்கும், இதர கல்லூரிகளில் உள்ள 1,731 இடங்களுக்குமென மொத்தம் 2 ஆயிரத்து 355 இடங்களுக்கு இந்த ஆண்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு, கலந்தாய்வு மூலம் அவை நிரப்பப்பட இருக்கின்றன. விண்ணப்பதாரர்கள் தகுதித் தேர்வில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையிலும், இடஒதுக்கீடு மற்றும் சிறப்பு இட ஒதுக்கீடுகளின் அடிப்படையிலும் வரிசைப்படுத்தப்பட்டு தேர்வு செய்யப்படுவார்கள். என் அமைச்சர் தெரிவித்தார். இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டக் கல்லூரி துவக்க விழா இன்று நடைபெற்றது. காரைக்குடியில் சட்டக் கல்லூரி தொடங்கிய நிலையில் 2022-2023-ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும். 3 ஆண்டுகள் சட்டப்படிப்பில் முதலாமாண்டில் 80 மாணவர்கள், 5 ஆண்டுகள் சட்டப்படிப்பில் முதலாமாண்டில் 80 மாணவர்களும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. தனி அலுவலராக திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரி உதவிப் பேராசிரியர் ராமபிரான் ரஞ்சித்சிங்கை நியமித்து அரசாணை வெளியிடப்பட்டது. காரைக்குடியில் சட்டக்கல்லூரி துவக்க விழாவானது அழகப்பா அரசினர் பொறியியல் கல்லூரிக் கலையரங்கில் நடைபெற்றதில் அமைச்சர்கள் ரகுபதி, பெரிய கருப்பன், முன்னால் அமைச்சரும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் உள்ள ப.சிதம்பரம், அவரது மனைவியும் மூத்த வழக்கறிஞருமான நளினி சிதம்பரம், சிவகங்கை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம், காரைக்குடி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் எஸ்.மாங்குடி, ஆகியோர் குத்துவிளக்கேற்றினர் காரைக்குடியில் அரசு சட்டக்கல்லூரி துவக்க விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் மதுசூதனரெட்டி, மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர், முன்னால் அமைச்சர் தமிழரசி சட்டத்துறைச் செயலாளர் கார்த்திகேயன், சட்டத்துறை முதல் பெண் இயக்குனர் டாக்டர். விஜய லெட்சுமி, உள்ளிட்ட அதிகாரிகள், மாணவர்கள், கட்சிகளின் பிரதிநிதிகள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கருத்துகள்