மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் ஆர்.வெங்கடரமணி நியமனம்.
தற்போது மத்திய அரசின் அட்டானி ஜெனரல் எனப்படும், அரசு தலைமை வழக்கறிஞராக இருக்கும் கே.கே.வேணுகோபால் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ளதையடுத்து மத்திய அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக, மூத்த வழக்கறிஞர் ஆர்.வெங்கடரமணி நியமனம் செய்யப்பட்டார். இவ் உத்தரவை குடியரசுத் தலைவர் பிறப்பித்துள்ளார். மேலும் பதவி ஏற்கும் நாளிலிருந்து மூன்று ஆண்டுகள், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக பணியில் இருப்பாரென அறிவிக்கப்பட்டுள்ளது. 1950 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதி பாண்டிச்சேரியில் பிறந்த வெங்கடரமணி, உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞராகவும், இந்திய சட்ட ஆணையத்தின் உறுப்பினராகவும் உள்ளவர் மூன்று தலைமுறைக்கும் மேலாக உச்ச நீதிமன்றத்தில் பயிற்சி செய்கிறார். அவர் மத்திய அரசு, மாநில அரசுகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் சார்பில் பல வழக்குகளில் பங்கேற்றுள்ளார். வெங்கடரமணி தமிழ்நாடு பார் கவுன்சிலில் ஜூலை மாதம் 1977 ஆம் ஆண்டில் பதிவு செய்து பயிற்சியைத் தொடங்கி. 1979 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தில் பயிற்சியைத் தொடங்கினார். 1997 ஆம் ஆண்டில், உச்ச நீதிமன்றத்தால் மூத்த வழக்கறிஞராகப் பரிந்துரைக்கப்பட்டார். 2010 ஆம் ஆண்டில் சட்ட ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 2013 ஆம் ஆண்டில், அவர் சட்ட ஆணையத்தின் உறுப்பினராக மற்றொரு பதவியைப் பெற்றார். வெங்கடரமணி நீதிபதி எம்.என். வெங்கடாசலையா தலைமையிலான அரசியலமைப்பு மறுஆய்வு ஆணையத்திலும் பணியாற்றியவர். பல வழக்கறிஞர்கள் சங்கங்களின் வாழ்நாள் உறுப்பினரானவராவார்.
கருத்துகள்