குலுவில் சுற்றுலா வாகனம் பள்ளத்தாக்கில் விழுந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்
இமாச்சலப் பிரதேசத்தின் குலுவில் சுற்றுலா வாகனம் பள்ளத்தாக்கில் விழுந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்
ஹிமாச்சல பிரதேசத்தின் குலு மாவட்டத்தில் சுற்றுலா வாகனம் பள்ளத்தாக்கில் விழுந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருவதாக திரு மோடி தெரிவித்தார். மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய அவர் வாழ்த்தியுள்ளார்.
பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;
“இமாச்சல பிரதேசத்தின் குலுவில் சுற்றுலா வாகனம் பள்ளத்தாக்கில் விழுந்த சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த விபத்தில் தங்கள் உறவினர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், காயமடைந்தவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகின்றன. அவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்:
-பிரதமர்"என்று பதிவு
கருத்துகள்