சர்வதேச அழைப்புகளுக்காக அமைக்கப்பட்ட சட்டவிரோத தொலைத்தொடர்பு கட்டமைப்பை தொலைத்தொடர்புத் துறை கண்டுபிடித்துள்ளது
இந்தியாவில் உள்ள உள்நாட்டு மொபைல் மற்றும் வயர்லைன் வாடிக்கையாளர்களுக்கு சர்வதேச அழைப்பு வசதியை அளிப்பதற்காக சட்டவிரோதமாக இணையதளம் மூலம் தொலைத் தொடர்பு கட்டமைப்பு அமைக்கப்பட்டதை தொலைத்தொடர்பு துறை கண்டுபிடித்துள்ளது. இதுபோன்ற சட்டவிரோதமான கட்டமைப்பு நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலையும், அரசுக்கு வருவாய் இழப்பையும் ஏற்படுத்தும்.
கடந்த 4 மாதங்களில் 30 சட்டவிரோத தொலைத்தொடர்பு அமைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற, சட்டவிரோத தொலைத் தொடர்பு அமைப்புகள் இருப்பது தெரியவந்தால், பொதுமக்கள் 18001104204/1963 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கருத்துகள்