மகாளய தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
மகாளய தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“மகாளய தினத்தன்று துர்கை அன்னையைப் பிரார்த்தனை செய்து, நம் மக்களின் நலனுக்காக அவரது ஆசிகளைப் பெறுகிறோம். அனைவரும் மகிழ்ச்சியாக, ஆரோக்கியத்துடன் இருக்கட்டும். செழிப்பும், நல்லிணக்கமும் எங்கும் தழைக்கட்டும். சுபமான மகாளயம்”, என்று பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருக்கிறார்
இன்று வேலை மற்றும் தொழில், வாழும் சூழல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த 96 நாட்களும் தர்பணம் செய்வது அனைவருக்கும் இயலாத காரியமாகும் என்றாலும் முக்கியமான தர்பணங்களையாவது தவறாமல் செய்வது நல்லது, அந்த வகையில் தக்ஷிணாயனத்தில் வரும் ஆடி அமாவாசையும் மகாளய அமாவாசையும் முக்கியமான ஒன்றாகும். அதேபோல உத்தராயணத்தில் தை அமாவாசையும் முக்கியமானது. மறக்காமல் தானம் கொடுங்கள்.. முன்னோர்களின் ஆசி கிடைக்கும்
மகாளய பட்ச காலத்தில் நம்முடன் இருக்கும் முன்னோர்களை நாம் சிரத்தையோடு வழிபாடு செய்து தர்ப்பணம் கொடுப்பதால் பித்ரு தோஷங்களில் இருந்து நிவர்த்தி பெறலாம். பித்ரு கடன் செய்வதனால் அவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். பித்ரு கடன் செய்யாது இருந்தால் பித்ரு தேவதைகள் சபித்து விடுவார்கள் என்பதும் காலம் காலமாக இந்துக்களின் நம்பிக்கை. அமாவாசை அன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பித்ருக்கள் வந்து நின்று கொண்டு காத்து இருக்கிறார்கள். அவர்களுக்கு எள் கலந்த தண்ணீரை தரவேண்டும். இதனால் அவர்கள் மனம் மகிழ்ந்து ஆசீர்வதிப்பர். இவ்வாறு செய்யாவிட்டால் பித்ருக்கள் வருத்தப்படும்போது அது பித்ரு தோஷமாக சந்ததியரின் ஜாதகத்தில் அமைகிறது.நமது முன்னோர்களில் ஒருவர் இறந்த திதி, பட்சம், தமிழ்மாதம் அறிந்து, ஒவ்வொரு தமிழ்வருடமும் அதே திதியன்று அக்னிக்கும் பிராமணர்களுக்கும் ஒரே நேரத்தில் போஜனமளித்து பின் பிண்ட ரூபத்தில் இருக்கும் பித்ருக்கு எள் கலந்த நீர் அளித்து தர்பணம் செய்வதே சிரார்த்தமாகும். இதனால் குடும்பத்தில் சகல தோஷசூரியனை ஆத்ம காரகன் எனவும் குருவை ஜீவ காரகன் எனவும் ஜோதிடம் போற்றுகிறது. ஆனால் இந்த உடலுக்கு சனீஸ்வரன் எனும் சனி பகவானையே காரகனாக கூறுகிறது. எனவே சனீஸ்வர பகவானின் தானியமான எள்ளை பித்ரு ஸ்ரார்த கர்மங்களுக்கும் வாகனமான காகத்தை பித்ரு ரூபமாகவும் பார்க்கிறது நமது வேதங்கள். எள்ளை மகாவிஷ்ணுவின் வியர்வையிலிருந்து தோன்றியதாக இதிகாசங்கள் கூறுகின்றன. எனவே அதனை பித்ருக்களுக்கான கர்மங்களுக்கு பயன்படுத்த பரிந்துரைக்கிறது வேதம்.
கருத்துகள்