முன்னாள் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இறுதி சடங்கில் கலந்துகொள்வதற்காக பிரதமர் டோக்கியோ புறப்பட்டார்
முன்னாள் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இறுதி சடங்கில் கலந்துகொள்வதற்காக பிரதமர் திரு நரேந்திர மோடி டோக்கியோ புறப்பட்டார்.
இதுகுறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்;
“நெருங்கிய நண்பரும், இந்தியா- ஜப்பான் நட்புறவின் சிறந்த சாதனையாளராக திகழ்ந்த முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக நான் டோக்கியோ செல்கிறேன்.”
“அனைத்து இந்தியர்களின் சார்பாக, பிரதமர் கிஷிதா மற்றும் திருமதி அபே-வுக்கு நான் இரங்கலை தெரிவிப்பேன். மறைந்த அபே அவர்கள் எதிர்பார்த்ததுபோல், இந்திய-ஜப்பான் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்த நாம் தொடர்ந்து பணியாற்றுவோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள்