பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் திருமகன் குருபூஜை விழாவில் 10,000 காவலர்கள்
பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அக்டோபர் 27 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை பாதுகாப்பு பணியில் ஈடுபடும் நிலை. தடை விதிக்கப்பட்ட இடங்கள், அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள் சம்பந்தப்பட்ட காவல்நிலையங்கள் மூலம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
காவல் துறை பிறப்பித்த உத்தரவுகளை மீறி நடந்து கொள்பவர்களையும் வாகனங்களையும் கண்காணிப்புக் காணொளி காட்சிப்பதிவு கருவிகளின் பதிவுகள் மூலம் ஆய்வு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பசும்பொன்னில் 13 ட்ரோன் கண்காணிப்புக் கருவிகள் , 92 நிரந்தர காட்சிப்பதிவு சாதனங்கள் மூலம் கண்காணிப்புப் பணிக்காக பயன்படுத்தப்படுகிறது.
2014 ஆம் ஆண்டு அதிமுக சார்பில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா, தனது சொந்த நிதி மூலம் தேவர் சிலைக்கு தங்கக் கவசம் ஒன்றை செய்து வழங்கி இருந்தார். பாதுகாப்புக் கருதி அந்தத் தங்க கவசம் மதுரையிலுள்ள வங்கியில் இதுவரை அதிமுக பொருளாளர் மற்றும் தேவர் நினைவாலயப் பொறுப்பாளர்கள் இருவரின் கூட்டுப் பொருப்பில் கையெழுத்திட்டு பாதுகாப்புடன்
எடுத்து விழா முடிந்து திரும்ப வைத்துப் பயன்படுத்தப்பட்ட நிலையில் அதிமுக தற்போது முதலில் இரண்டு பிரிவுகளாகவும் மீண்டும் இரண்டு பிரிவாகவும் பிரிந்து செயல்படுகிறது. இந்த நிலையில் எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இருவர் சார்பிலும் தங்களிடம் தங்கக் கவசத்தைக் கொடுக்குமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவில் இராமநாதபுரம் வருவாய
கோட்டாட்சியரிடம் ஒப்படைத்து மீண்டும் வங்கியில் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தி இருந்ததையடுத்து வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தில் மதுரை வருவாய்த்துறை அதிகாரி சக்திவேல் மற்றும் தேவர் நினைவாலயம் சார்பில் கூட்டுப் பொறுப்பில் தங்கக் கவசம் பெற்று
பசும்பொன்னில் ராமநாதபுரம் பொறுப்பு வருவாய்த்துறை அதிகாரி ராஜசேகரன் மற்றும் தேவர் நினைவில்லம் சார்பில் அதை வாங்கினர். தொடர்ந்து தேவர் நினைவிடத்தில் சிலைக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. இதனையடுத்து நினைவிடத்தில் பூஜைகள் செய்யப்பட்டு ஆயுதம் ஏந்திய காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டது.
தற்போது இன்று முதல் அரசியல் விழாவும் மற்றும் ஆன்மீக விழாவும் சிறப்பாக நடக்கிறது அதேபோல சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் நேற்று முன்தினம் மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் 221-வது குருபூஜை விழாவிற்கு அஞ்சலி செலுத்த வந்தவர்களில் பலர் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 247 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அவர்களுக்கு ரூ.3 லட்சத்து 66 ஆயிரத்து 400 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதே போல் நாளை(ஞாயிற்றுக்கிழமை) தேவர் திருமகன் குருபூஜைக்குச் செல்பவர்கள் கட்டாயம் விதிமுறைகளை பின்பற்றி செல்ல வேண்டும். அவ்வாறு செல்லாமல் விதிமுறைகளை மீறினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குருபூஜைக்கு ஆளும் திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் வருகை
பசும்பொன் தேவர் திருமகனார் அவர்களின் 115 வது பிறந்தநாள் விழா மற்றும் 60 வது குருபூஜைக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்
வராததால் பசும்பொன்னுக்கு மகன் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றப் பேரவை உறுப்பினராக வருகிறார். அவர்களுக்கு சிவகங்கை மாவட்ட திமுக சார்பில், திருப்புவனத்தில் மதியம் 1.00 மணி அளவில் திமுக வரவேற்பு அளிக்கிறது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட , ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், அனைத்து அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் திமுக தொண்டர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அமைச்சர் பெரிய கருப்பன் கேட்டுக்கொண்டுள்ளார்
தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு, மதுரை மாநகரில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வராததால் பசும்பொன்னுக்கு மகன் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றப் பேரவை உறுப்பினராக வருகிறார். அவர்களுக்கு சிவகங்கை மாவட்ட திமுக சார்பில், திருப்புவனத்தில் மதியம் 1.00 மணி அளவில் திமுக வரவேற்பு அளிக்கிறது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட , ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், அனைத்து அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் திமுக தொண்டர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அமைச்சர் பெரிய கருப்பன் கேட்டுக்கொண்டுள்ளார்
தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு, மதுரை மாநகரில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இன்று லாரிகள் மற்றும் கனகர வாகனங்கள் காலை 6 மணிமுதல் இரவு 10.30 மணி வரை நகருக்குள் கோரிப்பாளையம் தேவர் சிலை நோக்கி நுழையத் தடை செய்யப்படுகிறது.விழாவிற்கு வரும் வாகனங்களைத் தவிர, மற்ற வாகனங்கள் தேவர் சிலை நோக்கிவரும் சாலைகளில் செல்வதற்கு அனுமதியில்லை. நத்தம் ரோடு, அழகர்கோவில் ரோடு ஆகிய பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் பாண்டியன் ஹோட்டல் சந்திப்பில் திரும்பி மாற்று பாதையாக கக்கன்சிலை, ராஜா முத்தையா மன்றம், கே.கே.நகர், ஆவின் சந்திப்பு, அண்ணாநகர் மெயின் ரோடு, பி.டி.ஆர். பாலம், காமராஜர் சாலை வழியாகச் செல்லவேண்டும். மாட்டுத்தாவணி, ஆவின் சந்திப்பு ஆகிய பகுதிகளிலிருந்து நத்தம் ரோட்டிற்கு வரும் வாகனங்கள், ராஜாமுத்தையா மன்றம், அவுட் போஸ்ட், பாண்டியன் ஹோட்டல், தாமரைத்தொட்டி, புது நத்தம் ரோடு வழியாக செல்லவேண்டும். வடக்குவெளி வீதியிலிருந்து யானைக்கல், புதுப்பாலம் வரும் வாகனங்கள், பாலம் ஸ்டேசன் ரோடு, எம்.எம். லாட்ஜ் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி கான்சாபுரம் ரோடு, அரசன் ஸ்வீட்ஸ், பெரியார் மாளிகை வழியாகச் செல்ல வேண்டும். அதே போல், மேலமடைபகுதியிலிருந்து கோரிப்பாளையம் நோக்கி நகருக்குள் வரும் வாகனங்கள், ஆவின் சந்திப்பிலிருந்து குருவிக்காரன் சாலை வழியாக நகருக்குள் செல்லவேண்டும். குறிப்பாக, தேவர் ஜெயந்தி விழாவிற்காக பசும்பொன் செல்லக்கூடிய பிறமாவட்ட வாகனங்கள், நகருக்குள் செல்ல காவல்துறையால் அனுமதிக்கப்பட்ட வாகனங்களைத் தவிர இதர வாகனங்கள் நகருக்குள் வராமல் சுற்றுச்சாலை வழியாகச் செல்லவேண்டும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்