பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
2014-ம் ஆண்டில் இருந்து பிரதமரின் சிறந்த ஆளுமைக்கான விருது வழங்குவது தொடர்பான நடவடிக்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (தனிப்பொறுப்பு), புவி அறிவியல் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளி இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், பொது நிர்வாகம் 2022 பிரதமரின் சிறந்த ஆளுமைக்கான விருது தொடர்பான வலைதளத்தை இன்று புதுதில்லியில், தொடங்கிவைத்தார்.
மத்திய பணியாளர் அமைச்சகத்தின் நிர்வாக சீர்திருத்தம் மற்றும் மக்கள் குறைதீர்ப்பு துறை சார்பாக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பிரதமரின் விருதுகளுக்கான பதிவுகள் 2022 அக்டோபர் 03-ந் தேதி அன்று தொடங்குகிறது. விண்ணப்பதாரர்கள் 2022 அக்டோபர் 03-ந் தேதி முதல் நவம்பர் 28-ந் தேதி வரை தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
இந்த நிகழ்வில் பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், கடந்த 2014-ம் ஆண்டுக்கு பிறகு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையின் கீழ், பிரதமரின் பொது நிர்வாகத்தில் சிறந்த ஆளுமைக்கான விருது வழங்குவதில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றார். இந்த திட்டத்தின் நோக்கமானது ஆரோக்கியமான போட்டி, புதுமை, மறுஇயக்கம், சிறந்த நடைமுறைகளை ஏற்படுத்துவது போன்றவைகளாகும்.
பிரதமரின் விருதுகள் 2022-ல் பின்வருவனவைகள் உள்ளடக்கும், கோப்பை, ஆவணம், ரூ. 20 லட்சம் மதிப்பிலான ஊக்கத்தொகையானது விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்ட மாவட்டம் / நிறுவனத்திற்கு பொது நலன் சார்ந்த திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும்.
இந்த விருதுக்கான பரிசீலனைக் காலம் 2020 ஏப்ரல் 1-ந் தேதி முதல் 2022 செப்டம்பர் 30-ந் தேதி வரை ஆகும். பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்குவதற்கான பிரதமரின் விருதுகள் 2022ன் கீழ் வழங்கப்படும் மொத்த விருதுகளின் எண்ணிக்கை 16 ஆக இருக்கும்.
இதன் அடிப்படையில், இலக்குகளை அடைவதை விட, நல்ல நிர்வாகம், தகுதி அடிப்படையிலான சாதனை மற்றும் அனைத்து பகுதிகளும் மேன்மை அடைய முக்கியத்துவம் அளிக்கப்படும். இதை மையமாக வைத்து, விருதுகளுக்கான விண்ணப்பங்கள் நல்லாட்சி, தரம் மற்றும் அளவு ஆகிய மூன்று காரணிகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படும் என்று அமைச்சர் கூறினார்.
2022 ஆம் ஆண்டுக்கான பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்கும் பிரதமர் விருதுக்கு போட்டியிடும் போது, இந்தத் திட்டத்தில் பங்கேற்கும் அனைத்து மாவட்டங்களும் தங்கள் செயல்திறனை வெளிப்படுத்தும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் விருதுகள், 2022 மதிப்பீட்டிற்கான அளவுகோல்கள், வரி அமைச்சகங்கள்/சம்பந்தப்பட்ட துறைகளுடன் கலந்து ஆலோசித்து, தீர்மானங்களின் அடிப்படையில் எடுக்கப்படும்.
கருத்துகள்