ஜி-20 நாடுகளின் சுகாதார அமைச்சர்களின் இரண்டாவது மாநாட்டில் டாக்டர் மன்சுக் மாண்டவியா உரையாற்றினார்
“பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான இந்திய அரசு சுகாதாரத் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார். இந்தோனேசியாவின் பாலியில் இன்று நடைபெற்ற இரண்டாவது ஜி20 நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் கூட்டத்தில் உரையாற்றிய அவர், உலகளவில் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வகையிலும், எதிர்கால தலைமுறையினர் வாழ்வதற்கான சிறந்த மற்றும் ஆரோக்கியமான புவியை விட்டுச் செல்வதற்கும் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.
"எதிர்காலத்திற்கு உகந்த உலகளாவிய சுகாதார சுற்றுச்சூழலை உருவாக்குவதில் இந்தியா அளப்பரிய பங்களிப்பை வழங்க உறுதிபூண்டுள்ளது" என்று அவர் குறிப்பிட்டார்.
கருத்துகள்