மத்திய மக்கள் தொடர்பகத்தின் தில்லி அலுவலகத்தில் சிறப்பு இயக்கம் 2.0 இன் முன்னேற்றம் குறித்து தகவல் ஒலிபரப்பு செயலர் ஆய்வு
மத்திய மக்கள் தொடர்பகத்தின் தில்லி அலுவலகமான சோச்சனா பவனில் சிறப்பு இயக்கம் 2.0 இன் முன்னேற்றம் குறித்து தகவல் ஒலிபரப்பு செயலர் திரு அபூர்வ சந்திரா 27-ந்தேதி ஆய்வு மேற்கொண்டார். நிதி ஆலோசகர் திரு ஜெயந்த் சின்ஹா, மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மூத்த பொருளாதார ஆலோசகர் திரு ஆர்.கே. ஜெனா, கூடுதல் தலைமை இயக்குநர்( நிர்வாகம்) திரு சதீஷ் நம்பூதிரிபாட், கூடுதல் தலைமை இயக்குநர்( கணக்கு) திருமதி ரஞ்சனா தேவ் சர்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அலுவலகத்தின் பல்வேறு தளங்களை சுற்றிப்பார்த்து ஆய்வு செய்த திரு சந்திரா, கணக்குப்பதிவு அறைகளில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்ட அகற்றப்படாத பழைய பில்கள், பதிவேடுகளை பார்வையிட்டார். அவற்றை அழித்து, இடத்தை சுத்தப்படுத்தும் பணிகளின் முன்னேற்றம் குறித்து அவர் கேட்டறிந்தார்.
சிறப்புப் பிரச்சாரத்தின்போது 50%க்கும் அதிகமான பணிகள் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளது ஆய்வில் கண்டறியப்பட்டது. இந்தப்பணிகள் குறித்து செயலர் திருப்தி வெளியிட்டார். சிறப்பு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக பில்கள், தகவல் தொழில்நுட்ப கழிவுகள் மற்றும் செய்தித்தாள்களின் பழைய மாதிரி நகல்களை அகற்றியவுடன் 2500 சதுர அடிக்கு இடம் விடுவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செயலாளர் பின்னர் கணக்குப் பிரிவுகளையும் பார்வையிட்டார், அங்கு அவருக்கு பில்லிங் செயல்முறைகள் விளக்கப்பட்டன. சிபிசி அதிகாரிகள் குழு மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டிய அவர், மீதமுள்ள பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்
கருத்துகள்