ரூபாய். 21.31 லட்சம் மதிப்புள்ள 483 கிராம் தங்கம், ரூ.1லட்சம் மதிப்புள்ள சிகரெட் பறிமுதல்
கடந்த 29-ந்தேதி, துபாயிலிருந்து வந்த பயணி ஒருவரை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் இடைமறித்து சோதனையிட்ட போது, ரூ.1 லட்சம் மதிப்புள்ள 50 பெட்டி சிகரெட்டுகளை மறைத்து கொண்டுவந்தது தெரியவந்தது. மேலும் சோதனையிட்ட போது, 260 கிராம் எடைகொண்ட தங்கமும் மறைத்து எடுத்துவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.11.47 லட்சம் ஆகும்.
மற்றொரு சம்பவத்தில், துபாய் பயணி ஒருவரிடம் இருந்து, தூள் வடிவத்தில் தங்கம் மறைத்து எடுத்துவரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவரிடம் இருந்து, ஒரு தங்கச் சங்கிலியும், ஒரு தங்க நாணயமும் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் மொத்த எடை 223 கிராம் ஆகும். இதன் மதிப்பு ரூ.9.84 லட்சம் ஆகும்.
இரண்டு பயணிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.21.31 லட்சம் ஆகும். மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக, சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் எம். மாத்யூ ஜால்லி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள்