அக்டோபர் 28-ந் தேதியன்று நடைபெற உள்ள மாநில உள்துறை அமைச்சர்களின் சிந்தனை முகாமில் பிரதமர் கலந்து கொள்கிறார்
அக்டோபர் 28-ந் தேதியன்று காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ள மாநில உள்துறை அமைச்சர்களின் சிந்தனை முகாமில் பிரதமர் திரு.நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக கலந்து கொள்கிறார். இந்த சிந்தனை முகாம் ஹரியானாவில் உள்ள சுராஜ்கண்ட்டில் அக்டோபர் 27,28 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. மாநிலங்களின் உள்துறை செயலாளர்கள், காவல் துறை தலைவர்கள், மத்திய ஆயுத காவல் படை மற்றும் மத்திய காவல் அமைப்புகளின் தலைவர்கள் இந்த சிந்தனை முகாமில் பங்கேற்க உள்ளனர்.
சுதந்திர தின உரையின்போது பிரதமர் அறிவித்த 5 உறுதிமொழிகளின்படி உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களில் கொள்கையை உருவாக்குதலின் பொருட்டு உள்துறை அமைச்சர்களின் சிந்தனை முகாம் நடைபெறுகிறது. கூட்டுறவு கூட்டாட்சியின் உணர்வில், மத்திய மற்றும் மாநில அளவில் பல்வேறு பங்குதாரர்களிடையே திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பில் அதிக ஒத்துழைப்பை சிந்தனை முகாம் ஏற்படுத்தும்.
காவல் படையை நவீனமயமாக்குதல், இணையதள குற்ற மேலாண்மை, குற்றவியல் நீதி வழங்கும் முறையில் தகவல் தொழில்நுட்ப உபயோகத்தை அதிகரித்தல், நில எல்லை மேலாண்மை, கடலோர பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு, போதை மருந்து கடத்தலை தடுத்தல் உள்ளிட்ட விவகாரங்கள் ஆகியவை இந்த சிந்தனை முகாமில் விவாதிக்கப்படும்.
கருத்துகள்