ரூ.31 கோடி ஜிஎஸ்டி மோசடி செய்த ஒருவர் கைது செய்யப்பட்டார்
போலியான ரசீதுகள் தயாரித்து மோசடி செய்ததை ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் துறையின் சென்னை புறநகர் ஆணையரகம் 18.10.2022 அன்று கண்டுபிடித்ததோடு, இதற்கு மூளையாக செயல்பட்டவரையும் கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் மற்ற பலரின் பெயரில் ஜிஎஸ்டி பதிவு செய்துள்ளார். இந்த கற்பனையான நிறுவனங்களிடம் இருந்து பொருட்களோக சேவைகளோ வழங்காமல் பல்வேறு வணிக நிறுவனங்களுக்கு வரி ரசீதுகளை அனுப்பியுள்ளார். ஜிஎஸ்டி-யின் கீழ் உள்ளீட்டு வரி வரவு வகையில் ரூ.30.98 கோடி மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. மோசடி பேர்வழியுடன் அவரது கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டனர். மோசடியான ரசீதுகள் வழங்கிய வணிக நிறுவனங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.
ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் வரித் துறையின் சென்னை புறநகர் ஆணையரக ஆணையர் திரு எம் ஜி தமிழ் வளவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
கருத்துகள்